உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / 10 லட்சம் கார்கள் கியா நிறுவனம் விற்பனை

10 லட்சம் கார்கள் கியா நிறுவனம் விற்பனை

புதுடில்லி:'கியா' நிறுவனம்,இந்தியாவில் 10 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. இந்தியாவில் 2019ல் அறிமுகமான இந்நிறுவனம், வெறும் ஆறே ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை எட்டியுள்ளது.கியா இந்தியாவில் 'செல்டோஸ், சோனெட், இ.வி., -6, கரென்ஸ்' கார்களை விற்பனை செய்கிறது. செல்டோஸ் எஸ்.யு.வி., கார் தான் இந்தியாவில் இந்நிறுவனத்தின் முதல் காராகும். இந்நிறுவன விற்பனையில் செல்டோஸ் காரின் பங்கு மட்டும் 48 சதவீதம். சோனெட் கார் 34 சதவீதமாகவும், கரென்ஸ் 14 சதவீதமாகவும் உள்ளது. இதன் இன்ஜின் கார் விற்பனையில், பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் பங்கு 59 மற்றும் 41 சதவீதமாக உள்ளன.இந்த ஆண்டு இறுதிக்குள், இ.வி., 9 மின்சார கார் மற்றும் கார்னிவல் எம்.பி.வி., கார்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை