| ADDED : ஆக 22, 2024 01:37 AM
புதுடில்லி:ஜி.எஸ்.டி.,யில் உள்ளீட்டு வரிப்பயன் மோசடி யால், கடந்த 2020ம் ஆண்டு முதல், கிட்டத்தட்ட 1.20 லட்சம் கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளதை 'ஜி.எஸ்.டி., புலனாய்வு இயக்குனரகம்' கண்டுபிடித்துள்ளது. இதுகுறித்து நிதி அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:போலி நிறுவனங்களை கண்டுபிடிக்க, மத்திய மற்றும் மாநில ஜி.எஸ்.டி., அதிகாரிகள் நாடு முழுதும் கடந்த ஆகஸ்ட் 16 முதல், சிறப்பு சோதனை நடத்தி வருகின்றனர். அடுத்த இரண்டு மாதங்களுக்கு இந்த சோதனைகள் நடைபெற உள்ளன. வரி ஏய்ப்பு நிறுவனங்களை கண்டுபிடித்து, அவற்றின் மீது நடவடிக்கை எடுத்து, அரசின் வருவாயை பாதுகாப்பதே இந்த சோதனையின் நோக்கம். இதன் அடிப்படையில், கடந்த 2020 முதல் தற்போது வரை, உள்ளீட்டு வரிப் பயனில் மோசடி செய்து, 1.20 லட்சம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதை ஜி.எஸ்.டி., புலனாய்வு இயக்குனரகம் கண்டுபிடித்துள்ளது. இதற்கு மூலையாக செயல்பட்டவர்களை கண்டு பிடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போலியான 59,000 நிறுவனங்கள், இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்புடைய 170 நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவ்வாறு தெரிவித்துஉள்ளது.