தமிழகத்தில் 6 மாதங்களில் ரூ.16,000 கோடி முதலீடு
சென்னை:சென்னையில் கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில், கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 15,565 கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டுள்ளது.தமிழக அரசு நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது, 6.64 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் செய்ய நிறுவனங்கள் உறுதி அளித்திருந்தன. சிறு, குறு, நடுத்தர தொழில் பிரிவில், 63,573 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க, 5,068 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஒப்பந்தங்களின் கீழ், கடந்த 12ம் தேதி வரை, 15,565 கோடி ரூபாய் முதலீட்டில், 1,573 நிறுவனங்கள் உற்பத்தியை துவக்கியுள்ளதாக, சிறு தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறினார். மேலும் அவர் கூறியதாவது:சிறுதொழில் பிரிவில் வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல், ஜவுளி உற்பத்தி, வாகன உதிரிபாகங்கள் ஆகிய துறைகளில் அதிக முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. அவற்றில், கடந்த ஆறு மாதங்களிலேயே, 31 சதவீத நிறுவனங்கள் தொழில் துவங்கியுள்ளன. அதில் உணவு பதப்படுத்துதல், ஆயத்த ஆடை தயாரிப்பு, உதிரிபாக உற்பத்தி, தோல் பொருட்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. சிறுதொழில் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தால், 2.51 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும். இதுவரை தொழில் துவக்கிய நிறுவனங்களால், 57,439 வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. ஒப்பந்தம் செய்த எஞ்சிய நிறுவனங்களும் விரைவாக தொழில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.கை கொடுக்கும் கண்காணிப்பு ஒப்பந்தம் செய்தவர்கள் தொழில் தொடங்குவதை கண்காணிக்க, மண்டல வாரியாக அதிகாரிகள் அமைச்சர் அன்பரசன், துறைச் செயலர் அர்ச்சனா பட்நாயக், தொழில் வணிக ஆணையர் நிர்மல்ராஜ் கொண்ட ஆலோசனைக் குழு மாவட்டம், மண்டலம் வாரியாக தொழில் தொடங்குவதை கண்காணிப்பது அரசு துறைகளில் விரைவான அனுமதி, வங்கிக் கடன் ஏற்பாடு.