உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / கோவையில் பவுண்டரி கண்காட்சி துவக்கம்

கோவையில் பவுண்டரி கண்காட்சி துவக்கம்

கோவை:கோவை, 'கொடிசியா' தொழிற்காட்சி வளாகத்தில், இரும்பு மற்றும் இரும்பு சாரா வார்ப்பட தொழில் தொடர்பான, 'இன்டர் பவுண்டரி, இன்டர் டைகாஸ்ட்' கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நேற்று துவங்கியது. இதற்கு கொடிசியா முன்னாள் தலைவர் வரதராஜன் தலைமை வகித்தார்.இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் தமிழ்நாடு கிளை தலைவர் ஸ்ரீவத்ஸ்ராம் பேசுகையில், “பவுண்டரி தொழில்நுட்பங்கள் வளர்ச்சி பெற்று வருகின்றன. இருப்பினும், முன்பு கையாளப்பட்டு வந்த மனித ஆற்றலால் செயல்படும் பவுண்டரிகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. “நவீன தொழில்நுட்பங்களால் தற்போது எல்லாமே சாத்தியமாகின்றன. சர்வதேச அளவில், இந்திய பவுண்டரி பொருட்களுக்கு வரவேற்பு உள்ளன,” என்றார்.பவுண்டரி மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நடக்கும் இக்கண்காட்சி, காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடக்கிறது. 220 காட்சி அரங்குகளை, 10,000 பார்வையாளர்கள் பார்வையிடுவர் என தெரிகிறது. நாளையுடன் இக்கண்காட்சி நிறைவு பெறுகிறது. நிறைவு நாளன்று, மாலை 4.00 மணி வரை மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர்.கண்காட்சியில், பவுண்டரிகளின் தொழில்நுட்பம் குறித்த அரங்குகள் இடம் பெற்றன. இதில், பவுண்டரி வார்ப்படம் செய்வது, அவற்றை சரியான அளவுக்கு சரிபடுத்துதல், உயர்வெப்ப அளவீடுகளை டிஜிட்டல் முறையில் காட்டும் கருவிகள், மின்சாரத்தில் இயங்கும் பவுண்டரிகளில் மின் அளவீடுகள் உள்ளிட்ட பல்வேறு கருவிகள் இடம்பெற்றன.தானியங்கி முறையில் ரோபோக்களின் உதவியால், பவுண்டரிகளில் அதிக வெப்பத்தில் உள்ள உருக்குகளை கையாளுதல் முறைகளும் விளக்கப்பட்டன.விழாவில், கருத்தரங்கு மலர் வெளியிடப்பட்டது. கொடிசியா முன்னாள் தலைவர் பழனிசாமி, இந்திய பவுண்டரிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் ஜெயக்குமார் ராம்தாஸ், கிருஷ்ண சாம்ராஜ், 'சீமா' தலைவர் மிதுன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ