மேலும் செய்திகள்
எப் அண்டு ஓ., லாட் சைஸ் குறைப்பு
4 hour(s) ago
நிறுவன அறிவிப்புகள்
4 hour(s) ago
ஐ.பி.ஓ.,
4 hour(s) ago
இன்சூரன்ஸ் : விட்ட குறை தொட்ட குறை
4 hour(s) ago
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
5 hour(s) ago
மும்பை:வங்கி துறையில் நடந்த மோசடிகளின் எண்ணிக்கை கடந்தாண்டு அதிகரித்துள்ளது. மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பினும், அவற்றின் மதிப்பு குறைந்துள்ளது.வெளியிடப்பட்ட ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கையில், இது குறித்து தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில், மோசடி எண்ணிக்கை அதிகரித்திருப்பினும், அவற்றின் மதிப்பு, 47 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 - 23ம் நிதியாண்டில் 13,564 ஆக இருந்த வங்கி துறை மோசடி எண்ணிக்கை, கடந்த நிதியாண்டில் 36,075 ஆக அதிகரித்துள்ளது.இருப்பினும், மோசடி செய்யப்பட்ட தொகையின் மதிப்பு 46.70 சதவீதம் சரிந்து, 13,930 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. முந்தைய நிதியாண்டில் இது 26,127 கோடி ரூபாயாக இருந்தது.கடந்த மூன்று நிதியாண்டுகளுக்கான வங்கி வாரியான தரவுகளின் படி, தனியார் வங்கிகளில் அதிக எண்ணிக்கையிலான மோசடிகள் நடந்திருப்பதும், பொதுத்துறை வங்கிகளில் அதிக மதிப்பிலான மோசடிகள் நடந்திருப்பதும் தெரிய வருகிறது. டிஜிட்டல் பேமென்டுகள் பிரிவிலும், கடன் வழங்குவதிலும் அதிக மோசடிகள் நடந்துள்ளன. இந்நிலையில், மோசடிகளை குறைக்கவும், பணப் பட்டுவாடா முறையை மேம்படுத்தவும், புதிய முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
நிதியாண்டு எண்ணிக்கை மதிப்பு (ரூபாய் கோடியில்)2022 - 23 13,564 26,127 2023 - 24 36,075 13,930மதிப்பு சரிவு 47%
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
5 hour(s) ago