உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / ஐ.பி.ஓ., வருகிறது கல்பதரு

ஐ.பி.ஓ., வருகிறது கல்பதரு

புதுடில்லி : ரியல் எஸ்டேட் நிறுவனமான 'கல்பதரு' 1,590 கோடி ரூபாய் நிதி திரட்டும் வகையில், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபிக்கு விண்ணப்பித்துள்ளது.மும்பையை தளமாக கொண்டு செயல்பட்டு வரும் 'கல்பதரு' குழுமத்தை சேர்ந்தது கல்பதரு ரியல் எஸ்டேட் நிறுவனம். இந்நிறுவனம் தன் கடன்களை குறைப்பதற்காக, 1,590 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.இந்நிறுவனத்தின் பெரும்பாலான திட்டங்கள், மும்பை பெருநகர பகுதி, புனே ஆகிய இடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.மேலும், ஹைதராபாத், நொய்டா, சூரத், நாக்பூர், உதய்பூர் உள்ளிட்ட இடங்களிலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்