மேலும் செய்திகள்
டாப் கியரில் வாகன ஏற்றுமதி
27-Oct-2025
ஐ.பி.ஓ., ெவளியிட டாடா சன்ஸ் மறுப்பு
16-Oct-2025
முந்தைய முடிவு: 21,839.10நேற்றைய முடிவு: 22,011.95மாற்றம்: 172.86 ஏற்றம் பச்சை
முந்தைய முடிவு: 72,101.69நேற்றைய முடிவு: 72,641.19மாற்றம்: 736.37 ஏற்றம் பச்சை
* அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் வங்கி, வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யாதது, நேற்று சந்தை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி தலைவர் ஜெரோம் பவல், வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யவில்லை. மேலும், வட்டி விகிதத்தை நிலையாக வைத்திருக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.* இப்படி வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் நிலையாக வைத்திருப்பது, இது தொடர்ந்து ஐந்தாவது முறையாகும். வட்டி விகிதங்களை வரும் காலத்தில் மூன்று முறை குறைக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.* அமெரிக்க மத்திய வங்கி, வட்டியில் எந்த மாற்றத்தையும் அறிவிக்காத நிலையில், சுவிட்சர்லாந்து மத்திய வங்கி கடந்த 2022ம் ஆண்டுக்கு பின், முதன் முறையாக வட்டி குறைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதையடுத்து, அண்மைக் காலத்தில் வளர்ந்த பொருளாதாரங்களில் வட்டி குறைப்பை அறிவித்த நாடாக சுவிட்சர்லாந்து உள்ளது.* இப்படி உலகச் செய்திகள் சாதகமாக இருந்ததை அடுத்து, சென்செக்ஸ், நிப்டி ஆகிய இரு குறியீடுகளும் நேற்று 1 சதவீத உயர்வை கண்டன. இதையடுத்து, முதலீட்டாளர்கள் 6 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு லாபமீட்டினர். * பங்குகள் விலை உயர்ந்ததை அடுத்து, மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் மொத்த சந்தை மதிப்பு, 380 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்தது.* வங்கி துறையை பொறுத்தவரை, பொதுத்துறை வங்கி பங்குகள் விலை நேற்று அதிகரித்தது. குறிப்பாக பஞ்சாப் நேஷனல் பேங்க், இந்தியன் பேங்க், சென்ட்ரல் பேங்க், பேங்க் ஆப் இந்தியா போன்ற வங்கிகளின் பங்கு விலை, 4 சதவீதம் வரை உயர்வை கண்டன.* மும்பை பங்குச் சந்தையில் மிட்கேப் பங்குகள் 2.30 சதவீதமும்; ஸ்மால் கேப் பங்குகள் 2 சதவீதமும் விலை உயர்வை கண்டன.* ஆசிய சந்தைகளில் சியோல், டோக்கியோ, ஹாங்காங் ஆகியவை உயர்வையும்; ஷாங்காய் இறக்கத்தையும் கண்டன. புதன் அன்று, அமெரிக்க சந்தைகள் நல்ல லாபத்துடன் நிறைவடைந்தன.* உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய் விலை, 1 பேரலுக்கு 0.08 சதவீதம் உயர்ந்து, 85.88 அமெரிக்க டாலராக இருந்தது* அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் புதன் கிழமையன்று, 2,599 கோடி ரூபாய் அளவுக்கு தங்களது முதலீட்டை சந்தையிலிருந்து வெளியே எடுத்துள்ள தகவல் வெளியானது* அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 பைசா அதிகரித்து, 83.13 ரூபாயாக இருந்தது
* பி.பி.சி.எல்., * என்.டி.பி.சி.,* பவர் கிரிட் கார்ப்ப ரேஷன்* டாடா ஸ்டீல்* கோல் இந்தியா
* பார்தி ஏர்டெல்* எச்.டி.எப்.சி., லைப்* ஓ.என்.ஜி.சி.,* மாருதி சுசூகி* ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க்
(மும்பை பங்கு சந்தை) ஏற்றம் கண்டவை: 70-%இறக்கம் கண்டவை: 27%மாற்றம் காணாதவை: 3%
27-Oct-2025
16-Oct-2025