மேலும் செய்திகள்
ஜூன் காலாண்டு ஜி.டி.பி.,யில் மாறுபட்ட கணிப்பு
23-Aug-2024
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.70 சதவீதமாக குறைந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வளர்ச்சி, 8.20 சதவீதமாக இருந்தது. ஜி.டி.பி. வளர்ச்சி, 7.10 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்திருந்த நிலையில், 0.40 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஐந்து காலாண்டுகளில் இதுவே குறைவான வளர்ச்சியாகும். இதற்கு முன், கடந்தாண்டு ஜனவரி - மார்ச் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி, 6.20 சதவீதமாக இருந்ததே குறைந்தபட்ச வளர்ச்சியாக இருந்தது. எனினும், நடப்பாண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலக்கட்டத்தில், சீனாவின் வளர்ச்சி, 4.70 சதவீதமாகவே இருந்ததால், 6.70 சதவீத வளர்ச்சியுடன், வேகமாக வளரும் பெரிய பொருளாதாரம் என்ற இடத்தை இந்தியா தக்கவைத்துக் கொண்டுள்ளது.
கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், 3.70 சதவீதமாக இருந்த விவசாயத் துறையின் வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 2 சதவீதமாக குறைந்துள்ளது தயாரிப்பு துறையின் வளர்ச்சி, 5 சதவீதத்திலிருந்து, தற்போது 7 சதவீதமாக அதிகரித்து உள்ளது அதிகபட்சமாக, கட்டுமானத் துறை 10.50 சதவீத வளர்ச்சியையும்; மின்சாரம், எரிவாயு, நீர் வினியோகம் உள்ளிட்ட அடிப்படை சேவைகள் துறை, 10.40 சதவீத வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது.
2023ஏப்ரல் - ஜூன் 8.20ஜூலை - செப்டம்பர் 8.10அக்டோபர் - டிசம்பர் 8.602024ஜனவரி - மார்ச் 7.80 ஏப்ரல் - ஜூன் 6.70
23-Aug-2024