உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.15,948 கோடி விடுவிப்பு

சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.15,948 கோடி விடுவிப்பு

புதுடில்லி:ஜனவரி 31ம் தேதி வரையிலான கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களின் கீழ், நாடு முழுதும் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு கிட்டத்தட்ட 15,948 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளதாக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் அனுப்ரியா படேல் தெரிவித்தார். விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தும் வகையிலும், சர்க்கரை ஆலைகளின் பணப்புழக்கத்தை மேம்படுத்தும் வகையிலும், சந்தைப்படுத்துதல் செலவுகள், கையாளுதல் மற்றும் பிற செயலாக்க செலவுகளை ஆகியவற்றை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்கள் கடந்த ஆண்டுகளில் அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டன. இத்திட்டங்களின் கீழ், 15,948 கோடி ரூபாயை சர்க்கரை ஆலைகளுக்கு, மத்திய அரசு வழங்கிஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை