உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / ஸ்பெயினில் உள்ள முதல்வர் ஸ்டாலினிடம் தமிழக ஜவுளி துறையினரின் எதிர்பார்ப்பு

ஸ்பெயினில் உள்ள முதல்வர் ஸ்டாலினிடம் தமிழக ஜவுளி துறையினரின் எதிர்பார்ப்பு

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்க, ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார். தமிழகத்தில் இருந்து ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்க, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த, மத்திய அரசை ஸ்டாலின் வலியுறுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு, தொழில் துறையினரிடம் எழுந்துள்ளது.தமிழகத்தில் இருந்து, ஐரோப்பிய கூட்டைமைப்பு நாடுகளுக்கு, ஆண்டுக்கு, 15,000 கோடி ரூபாய்க்கு ஜவுளி ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஐரோப்பிய கூட்டமைப்பு இந்திய ஜவுளிக்கு, 9.60 சதவீதம் வரி விதிக்கிறது.இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, வங்கதேசம் ஆகியவை, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுடன் வரி இல்லாத வர்த்தக ஒப்பந்தம் செய்து உள்ளன.

வரி விலக்கு

அந்நாடுகளில் இருந்து ஐரோப்பிய கூட்டமைப்புக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளிகளுக்கு வரி விதிப்பதில்லை.எனவே, தமிழக ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியாவும், வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு, தொழில் துறையினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் தொழில் முதலீடுகளை ஈர்க்க, ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள ஸ்பெயின் நாட்டிற்கு, முதல்வர் ஸ்டாலின் சென்றுள்ளார். எனவே, வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளுமாறு, மத்திய அரசை ஸ்டாலின் வலியுறுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு, தொழில் துறையினரிடம் எழுந்துஉள்ளது.இதுகுறித்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க முன்னாள் தலைவர் ராஜா சண்முகம் கூறியதாவது:ஐரோப்பிய கூட்டமைப்புடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்தால், தமிழகத்தில் இருந்து ஜவுளி ஏற்றுமதி மிகவும் அதிகரிக்கும். எனவே, அந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

கட்டமைப்பு வசதி

முதல்வர் ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டுக்கு சென்றிருக்கும் நிலையில் ஐரோப்பிய கூட்டமைப்புடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.திருப்பூரில் உள்ள தொழிலாளர்கள் பயன்பெற தொழிலாளர்கள் குடியிருப்பு, மருத்துவ வசதிகள் போன்ற கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்தி தர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் மேற் கொள்ளுமாறு, மத்திய அரசை ஸ்டாலின் வலியுறுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு, தொழில் துறையினரிடம் எழுந்துள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ