உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் /  இந்திய ஏற்றுமதி பாதிக்கப்படவில்லை எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கையில் தகவல்

 இந்திய ஏற்றுமதி பாதிக்கப்படவில்லை எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கையில் தகவல்

புதுடில்லி: சர்வதேச அளவில் வரிவிதிப்பு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகிய சவால்கள் இருந்தாலும் இந்தியாவின் ஏற்றுமதி சீராக உள்ளது என எஸ்.பி.ஐ., வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - செப்டம்பர் வரையிலான காலகட்டத் தில், நாட்டின் ஏற்றுமதி 2.90 சதவீதம் வளர்ச்சியடைந்து 19.72 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடந்தாண்டின் இதே காலாண்டில் 19.20 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. அதேபோல, அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 13 சதவீதம் அதிகரித்து 4.03 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந் தாண்டின் இதே காலத்தில், இது 3.59 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. எனினும், மாதாந்திர ஒப்பீட்டில் கடந்தாண்டு செப்டம்பரைவிட நடப்பாண்டு செப்டம்பரில் அமெரிக்காவுக்கான சரக்கு ஏற்றுமதி 12 சதவீதம் குறைந்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வியட்நாம், சீனா, ஜப்பான், வங்கதேசம், ஹாங்காங், இலங்கை, நைஜீரியா ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதி அதிகரித்து உள்ளது. அமெரிக்காவின் வரிவிதிப்பு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகிய சவால்கள் இருந்தாலும் இந்தியாவின் ஏற்றுமதி தற்போது வரை சீராகவே உள்ளது. இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், ஜி.டி.பி.,யில் 0.20 சதவீதமாக இருந்தது. இது கடந்த நிதியாண்டின் 0.90 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் நல்ல முன்னேற்றம் ஆகும். சேவை ஏற்றுமதி, தாயகத்துக்கு பணம் அனுப்புவது அதிகரித்துள்ளதே இதற்கு முக்கிய காரணம். இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை