உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / பங்கு சந்தை தகவல்களை அறிய தமிழில் இணையதளம் துவக்கம்

பங்கு சந்தை தகவல்களை அறிய தமிழில் இணையதளம் துவக்கம்

மும்பை:தேசிய பங்குச் சந்தை யான என்.எஸ்.இ., புதிய மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதன் வாயிலாக தனது இணைய தள சேவையை, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகள் உட்பட 11 மொழிகளில் துவங்கியுள்ளது. பங்கு வர்த்தக விபரங்களை மாநில மொழிகளில் வழங்குவதன் வாயிலாக, நிதி சார்ந்த புள்ளிவிபரங்களை, நாடு முழுவதும் முதலீட்டாளர்கள் அவரவர் மொழிகளில் அறிய வாய்ப்பு ஏற்படும் என என்.எஸ்.இ., தெரிவித்து உள்ளது. மேலும், மாநில மொழிகளில் தேசிய பங்குச் சந்தையின் இணைய தளத்தை பயன்படுத்த இயலும் என்பதால், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். மேலும், நிதி சார்ந்த தகவல்களை மொழி புரியாமல் தவிர்த்து வந்த பலரும், இனி அதில் ஆர்வம் காட்ட இயலும் என்றும் பங்குச் சந்தை நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.'என்.எஸ்.இ., இந்தியா' மொபைல் செயலியை கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஐ.ஓ.எஸ்., தளங்களில் பதிவிறக்கம் செய்து, பங்குச் சந்தை குறித்த தகவல்களைப் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.இவை தவிர, ஏற்கனவே அளிக்கப்பட்டு வரும் ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி மற்றும் குஜராத்தி மொழிகள் வசதியும் தொடரும் எனவும் என்.எஸ்.இ., அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Lakshminarayanan Subramanian
நவ 06, 2024 00:33

மிகப்பெரிய அளவில் தமிழகத்தில் பங்கு வளர்ச்சிக்கு முதலீட்டுக்கு வழிவகுக்கும் உடனடியாக தெரியாது எதிர்காலத்தில் சிறக்கும் முதலில் மியூஜுவல் பண்டில் முதலில் தெரியும்


RAJAGURU M
நவ 05, 2024 15:10

தினமலருக்கு நன்றி


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 05, 2024 07:31

என் எஸ் இ என்னும் பெயரில் ஏற்கனவே பல ஆப் கள் உள்ளன .........


Nagarajan. S
நவ 04, 2024 15:55

இது 2015 ல் இருந்த அருமைய இருக்கும்


Shatcharan
நவ 04, 2024 13:15

ஆங்கிலச் சொர்கள் தான் best


புதிய வீடியோ