உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / நேரடி விற்பனை நிறுவனங்களுக்கு கண்காணிப்பு ஆணையம்

நேரடி விற்பனை நிறுவனங்களுக்கு கண்காணிப்பு ஆணையம்

சென்னை:நேரடி விற்பனை நிறுவனங்களுக்கான கண்காணிப்பு ஆணையம் அமைக்கும் எட்டு மாநிலங் களுள் தமிழகமும் ஒன்று என, தொழில்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நேரடி விற்பனை நிறுவனங்கள் என்பவை சிறு தொழில்முனைவோர்கள், இடைத்தரகர்கள் இன்றி உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக பொருட்களை வாங்கி, வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்பவையாகும். இந்நிலையில், நேரடி விற்பனை நிறுவனங்கள் குறித்த புகார்களை விசாரிக்க கண்காணிப்பு ஆணையத்தை மாநில அரசு அமைக்க உள்ளது. கண்காணிப்பு ஆணையம் கடுமையான விதிமுறைகளுடன் அதிகாரம் பெற்றிருப்பதால், நுகர்வோர்களிடம் இருந்து பெறப்படும் புகார்களுக்கு தீர்வு மன்றமாக செயல்படும் என கூறப்படுகிறது. இதுகுறித்து இந்திய நேரடி விற்பனை சங்கத்தின் தலைவர் விவேக் கடோச் கூறியதாவது:தென்மண்டலத்தில் கர்நாடகாவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு நேரடி விற்பனையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதில், 1.90 லட்சத்துக்கும் மேற்பட்ட குறுந்தொழில் முனைவோர் பணிபுரிந்து வருகின்றனர். தென்மண்டல நேரடி விற்பனை தொழிலுக்கு தமிழகம் ஒரு முக்கிய மற்றும் முன்னுரிமை மாநிலமாக உள்ளது. மேலும், மாநிலத்தின் நேரடி விற்பனை தொழில் வளர்ச்சிக்கான புள்ளிகள் புதிய உயர்வைத் தொட்டுள்ளது இதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இதுவரை தமிழகம் உள்ளிட்ட எட்டு மாநிலங்கள் விதிமுறைகளை பின்பற்றி கண்காணிப்பு குழுக்களை அமைத்துள்ளன. இதை மற்ற மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை