உள்ளூர் செய்திகள்

பங்கு சந்தை

இந்திய பங்கு சந்தை கடந்த வாரம் ஏறுமுகத்துடன் முடிந்தது. வார இறுதி வர்த்தக நிறைவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 227 புள்ளிகள் உயர்ந்து, 78,699 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 63 புள்ளிகள் உயர்ந்து, 23,813 புள்ளிகளாக இருந்தது. பி.எஸ்.இ., ஸ்மால்கேப் குறியீடு லேசான ஏறுமுகத்துடன் முடிந்த நிலையில், மிட்கேப் குறியீடு இறங்குமுகத்துடன் முடிந்தது.வெளிநாட்டு நிதி கழக முதலீட்டாளர்கள் போக்கு மற்றும் இந்திய ரூபாய் மதிப்பின் சரிவு காரணமாக, முதலீட்டாளர்கள் எச்சரிக்கையான அணுகுமுறை கொண்டிருந்தனர். ஆட்டோ மற்றும் வங்கி துறை பங்குகள் ஏற்றம் கண்டன. வெளிநாட்டு நிதி கழக முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பதில் ஆர்வம் காட்டினர்.

ஏறுமுகம் கண்ட பங்குகள்

1. எம் அண்டு எம்- 3,050.10 (2.47 )2. இண்டஸ் இண்ட் பாங்க்- 953.55 (2.30) 3. பஜாஜ் பைனான்ஸ்- 6,910.10 (1.37)

இறங்குமுகம் கண்ட பங்குகள்

1. எஸ்.பி.ஐ.,- 799.55 (1.49) 2. அதானி போர்ட்ஸ்- 1,233.00 (0.88) 3. டாடா ஸ்டீல் 138.95 (1.00)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை