உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

சந்தையை சரித்த பதற்றம்

இந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாளான நேற்று, நிப்டி மற்றும் சென்செக்ஸ் குறியீடுகள் கடும் இறக்கத்துடன் நிறைவடைந்தன. பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்தியா உரிய பதிலடி அளித்து வரும் நிலையில், அணு ஆயுதங்கள் வைத்துள்ள இரு நாடுகள் இடையே போர் தீவிரமடையும் சூழல் நீடிக்கிறது. இதன் தாக்கத்தால், நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போதே, சந்தை குறியீடுகள் சரிவுடன் துவங்கின.

தொடர்ந்து, முதலீட்டாளர்கள் முன்னணி

நிறுவன பங்குகளை விற்று லாபத்தை பதிவு செய்தனர். இதனால், நிப்டி, சென்செக்ஸ் தலா 1 சதவீதம் சரிவை கண்டன. அதிகபட்சமாக நிப்டி குறியீட்டில் ரியல் எஸ்டேட் குறியீடு 2.38 சதவீதம் சரிவையும், டிபென்ஸ் குறியீடு 3.04 சதவீதம் உயர்வையும் கண்டன. வாராந்திர அடிப்படையில் சந்தை குறியீடுகள் சரிவுடன் நிறைவு செய்தன.சரிவுக்கு காரணங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக தீவிரமடையும் இந்தியாவின் நடவடிக்கை பங்குகள் மதிப்பு உயர்வால், லாபத்தை பதிவு செய்த முதலீட்டாளர்கள்.

உலக சந்தைகள்

அமெரிக்க, ஐரோப்பிய சந்தைகள் நேற்று உயர்வுடன் நிறைவடைந்தன. ஆசிய சந்தையை பொறுத்தவரை, ஜப்பானின் நிக்கி 225, ஹாங்காங்கின் ஹாங் சேங் குறியீடு உயர்வுடனும், தென்கொரியாவின் கோஸ்பி, சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ., குறியீடு சரிவுடனும் வர்த்தகமாகின. போர் பதற்றம் காரணமாக கடந்த நான்கு நாட்கள் சரிவை கண்ட பாகிஸ்தான் பங்கு சந்தையின் கே.எஸ்.இ., 100 குறியீடு, நேற்றைய வர்த்தகத்தின் போது 2 சதவீதம் அளவுக்கு உயர்வு கண்டது. உயர்வு கண்ட பங்குகள் - நிப்டி டைட்டன்: 4.17% லார்சன் அண்டு டூப்ரோ: 3.84% டாடா மோட்டார்ஸ்: 3.83%சரிவை கண்ட பங்குகள் - நிப்டி ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி: 3.24% பவர் கிரிட்: 2.74% அல்ட்ராடெக் சிமென்ட்: 2.22%

அன்னிய முதலீடு

அன்னிய முதலீட்டாளர்கள் 3,799 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்று இருந்தனர்.

கச்சா எண்ணெய்

உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 1.53 சதவீதம் அதிகரித்து, 63.80 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 22 பைசா அதிகரித்து, 85.36 ரூபாயாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை