உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / தமிழக சேமிப்பு கிடங்கு கொள்கை தயாரிப்பு பணியில் டிட்கோ தீவிரம்

தமிழக சேமிப்பு கிடங்கு கொள்கை தயாரிப்பு பணியில் டிட்கோ தீவிரம்

சென்னை, மே 6- சேமிப்பு கிடங்கு தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க, தமிழக சேமிப்பு கிடங்கு கொள்கை தயாரிக்கும் பணியை, 'டிட்கோ' நிறுவனம் துவக்கியுள்ளது. இதற்காக, தொழில் துறையினரிடமும் கருத்து கேட்டு வருகிறது. தமிழகத்தில் வாகனம், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவை, பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில், 4.47 லட்சம் கோடி ரூபாயுடன் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதனால், சேமிப்பு கிடங்குகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது.இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு கிராமத்தில், 182 ஏக்கரில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்காவை, 'டிட்கோ' நிறுவனம், மத்திய அரசு நிறுவனங்களுடன் இணைந்து அமைத்து வருகிறது. அங்கு, 1,423 கோடி ரூபாய் செலவில் சேமிப்பு கிடங்குகள், குளிர்ப்பதன கிடங்குகள் உள்ளிட்ட ஏற்றுமதி, இறக்குமதிக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. இதேபோல், கோவையிலும் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்கப்பட உள்ளது. தமிழக ஏற்றுமதிக்கு சென்னை, எண்ணுாரில் காமராஜர், காட்டுப்பள்ளி, துாத்துக்குடி துறைமுகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்நிலையில், கடலுார் உள்ளிட்ட சிறு துறைமுகங்களை மேம்படுத்தும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. இதனால் கிடங்களுக்கு தேவை அதிகரித்துள்ளது. மேலும், சரக்கு போக்குவரத்து துறையில் தமிழகத்தை மேம்படுத்த, தனியார் நிறுவனங்கள் வாயிலாக, மாநிலம் முழுதும் நவீன சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படுவதை ஊக்குவிக்க, தமிழக சேமிப்பு கிடங்கு கொள்கை வெளியிடப்படும் என்ற அறிவிப்பு, சட்டசபையில் வெளியானது.இதை தொடர்ந்து, கிடங்கு கொள்கை தயாரிக்கும் பணியை, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது.சேமிப்பு கிடங்கு தொழில்இந்திய சந்தை மதிப்பு3,00,000 கோடி ரூபாய்ஆண்டு வளர்ச்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை