உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹசன் அலி சொத்துக்கள் : வெளிநாடு செல்கிறது குழு

ஹசன் அலி சொத்துக்கள் : வெளிநாடு செல்கிறது குழு

புதுடில்லி : புனேயைச் சேர்ந்த குதிரைப் பண்ணை அதிபர் ஹசன் அலியின் சொத்துகள் குறித்து விசாரிக்க, அமலாக்கத் துறை அதிகாரிகள், சுவிட்சர்லாந்து, பிரிட்டன், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு செல்ல உள்ளனர். புனேயைச் சேர்ந்த குதிரைப் பண்ணை அதிபர் ஹசன் அலி, வருமான வரி ஏய்ப்பு செய்து, பல ஆயிரம் கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். கறுப்பு பணம் மற்றும் அன்னிய செலாவணி மோசடி, உள்ளிட்ட வழக்குகள் இவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

சர்வதேச ஆயுத வர்த்தகர் அத்னான் க÷ஷாகியுடன் ஹசன் அலிக்கு தொடர்பு உள்ளதாகக் கூறப்பட்டது. கோல்கட்டாவைச் சேர்ந்த வர்த்தகர் காசிநாத்துக்கும், ஹசன் அலிக்கும், பிரிட்டன், சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகளில் உள்ள வங்கி அதிகாரிகளுடன் தொடர்பு உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, ஹசன் அலி வெளிநாட்டில் குவித்துள்ள சொத்துகள் குறித்த விவரங்களை ஆராய, இருவர் கொண்ட குழுவை மேற்கண்ட நாடுகளுக்கு அமலாக்கத் துறை அனுப்ப உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

M Ramachandran
செப் 12, 2025 10:56

இவங்கள் திருந்திர ஜாதியில்லை. பாக்கிஸ்தானிலுள்ள ராணுவத்தையும் அதை சார்ந்த கும்பலையும் சுத்தமா அடுத்த சண்டையின் போது சுத்தமா அழிக்க வேண்டிய நிர்பந்ததை அவர்கள் ஏற்படுத்துகிறார்கள். ராணுவ தீவிர குணமுடையவர்களை அமெரிக்கா மாதிரி காணாமப்போக செய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி