உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் பதவி விலக அத்வானி கோரிக்கை

பிரதமர் பதவி விலக அத்வானி கோரிக்கை

நெல்லூர்: ஊழல் மற்றும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த இயலாத பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கேட்டுக்கொண்டுள்ளார். ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடந்த விழா ஒன்றில் பேசிய அவர், பிரதமரால் சாதாரண மக்களின் பிரச்சனைகளை புரிந்து கொள்ள இயலாது. ஏனெனில் அவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பிரதமர் ஆகவில்லை. ஐக்கிய முற்போக்கு அரசு முற்றிலும் ஒரு ஊழல் அரசு. பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியாத அரசு. எனவே இவற்றிற்கு தார்மீக பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வேண்டும் என்றும், புதிதாக தேர்தல் நடத்தப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ