உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நம்பிக்கை தகர்ப்பு!

நம்பிக்கை தகர்ப்பு!

மேற்கு வங்கத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க மாநில அரசு தவறிவிட்டது. மக்களால் கிரிமினல்களையும், போலீசையும் வேறுபடுத்தி பார்க்க முடியவில்லை. யார் திருடன், யார் போலீஸ் என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது.ஆனந்த போஸ், கவர்னர், மேற்கு வங்கம்

இடஒதுக்கீட்டில் தாக்குதல்!

மத்திய அரசின் இணைச் செயலர், இயக்குனர்கள் மற்றும் துணைச் செயலர் ஆகிய 45 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மோடி அரசு வெளியிட்டுள்ளது. அதில், எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி.,யினரை இடஒதுக்கீட்டில் இருந்து விலக்கி வைக்கும் சதித்திட்டம் உள்ளது.மல்லிகார்ஜுன கார்கே, தலைவர், காங்கிரஸ்

பிரதமரிடம் உண்மையில்லை!

பிரதமர் மோடி தன் சுதந்திர தின உரையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து பேசினார். ஆனால், 2019ல் ஒன்றாக தேர்தல் நடந்த ஹரியானா, மஹாராஷ்டிராவுக்கு தற்போது தனித்தனியாக தேர்தல் நடக்க உள்ளது. பின் எப்படி ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமாகும்? சரத் பவார், தலைவர், தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திர பவார் அணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்