உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எதிர்கட்சி வரிசையில் இண்டியா கூட்டணி: உரிய நேரத்தில் உரிய முடிவு: மல்லிகார்ஜூன கார்கே

எதிர்கட்சி வரிசையில் இண்டியா கூட்டணி: உரிய நேரத்தில் உரிய முடிவு: மல்லிகார்ஜூன கார்கே

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: எதிர்கட்சி வரிசையில் அமர்வதா, இல்லையா என்பது குறித்து இண்டியா கூட்டணி உரிய நேரத்தில் உரிய முடிவு எடுக்கும் என மல்லிகார்ஜூன கார்கே கூறினார். இண்டியா கூட்டணி கூட்டத்திற்கு பின் காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியது, உரிய நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும். தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு நன்றி. மக்களின் தீர்ப்பை வரவேற்கிறேன். தேர்தல் முடிவு பா.ஜ.,வுக்கு மிகப்பெரிய அடி. பா.ஜ.,வின் மக்கள் விரோத போக்கை தொடர்ந்து இணைந்து கடுமையாக எதிர்ப்போம். பாஜவின் பாசிச அரசியலை எதிர்த்து இந்தியா கூட்டணி தொடர்ந்து போராடும். மக்களின் விருப்பத்தை இந்தியா கூட்டணி பூர்த்தி செய்துள்ளது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தொடர்ந்து பாடுபடுவோம். பாஜவின் வெறுப்பு மற்றும் ஊழல்அரசியலுக்கு மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் பதில் அளித்து உள்ளனர். மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தேவையான நேரத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு கார்கே கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Kumar
ஜூன் 06, 2024 14:59

வேறு வழி


ராது
ஜூன் 06, 2024 11:23

evm evm evm hope i.n.d.i.a has not tempered with wherever they have one gargey sir - shameless creatures politicians and sorry that we have to elect better among the one - democracy is crazy


Dharmaraj
ஜூன் 06, 2024 09:55

முதலில் தமிழகத்தை விட்டு வெளியே வந்து பாருங்கள்... உடன்பிறப்புகளே 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி ஏழை எளிய மக்களுக்கு.. பயன் தரவில்லை அதனால் தான் அவர்களுக்கு இந்த தேர்தல் இறங்கு முகமாக மாரி உள்ளது...யாரையும் குறை கூறாமல்... சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள்


M S RAGHUNATHAN
ஜூன் 06, 2024 08:44

இந்த அளவுக்கு காங்கிரஸ் வெற்றி பெற்றதுக்கு காரணம் அந்த 83 வயது மூத்தவர் கார்கே அவர்கள் தான். ராகுலும், பிரியங்காவும் முற்றிலும் விலகி இருந்தால் காங்கிரஸ் இன்னமும் வென்று இருக்கும். அவரின் பங்களிப்பை இன்னமும் காங்கிரஸ் அடிமைகள் போற்றவில்லை


பேசும் தமிழன்
ஜூன் 06, 2024 08:03

உங்களை மக்கள் தேர்தலில் விரட்டி அடிக்கிறார்கள்..... மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ள வில்லை.... அதை முதலில் உணருங்கள்.


Santi
ஜூன் 06, 2024 00:00

நீங்கள் எதிர் கட்சி வரிசையில் இருக்கணும் தான் ஓட்டு போட்டாங்க... அத கூட இன்னணியும் புரிஞ்சிக்க முடியில... இவங்க எல்லாம் ஆளும் கட்சி ஆனா நாட்டின் நிலைமை குறித்து நெனைச்சு பாருங்க!!


R.MURALIKRISHNAN
ஜூன் 05, 2024 23:16

டீ காப்பி குடிச்சமா 5 வருஷம் கழிஞ்சு பின்னயும் இந்த காமடி தர்பாருக்கு வந்தமான்னு இருக்கணும். மொத்தமா ஜெயிச்சது கூட பிஜேபி சிங்கிளா ஜெயிச்ச எண்ணிக்கைக்கு சமமா கூட இல்ல இதுல என்னப்பா பில்டப்பு


M S RAGHUNATHAN
ஜூன் 05, 2024 22:56

எதிர் வரிசையில் உட்கார ஆசை இல்லை என்றால் ராஜினாமா செய்து விட்டுப் போங்கள். இனி வரும் நாட்களில் பாராளுமன்றத்தை நடத்த விடாமல் ஆர்பாட்டம் செய்தால், உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் படிகள், சலுகைகளை குறைந்தது 1 மாதத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் உத்தரவிட வேண்டும்.


saravanan
ஜூன் 05, 2024 22:27

மோடி அவர்களை முழுமையாக கூட எதிர்கட்சியினரால் வெல்ல முடியவில்லை. இந்த சிறிய வெற்றிக்கே இத்தனை ஆர்ப்பாட்டமும், மகிழ்ச்சியுமா ஆனால் இந்த மகிழ்ச்சி நிலையானது அல்ல என்று நினைக்கும் போதுதான் நமக்கு கஷ்டமாக இருக்கிறது.


T.Gajendran
ஜூன் 07, 2024 12:02

ஆம் இன்று வென்றவர்கள், நாளை தோற்கலாம், இன்று தோல்வியுற்றவர்கள், நாளை நாட்டை ஆளலாம், மக்கள் சேவையில், வெற்றி தோல்வி, மாறி, மாறி, வரும்,


Senthil K
ஜூன் 05, 2024 22:24

சும்மா... கொஞ்சம்.. டகுல் பாட்சா.. காட்டலாம்னு.. பார்த்தால்.. மொத்தமாக.. போச்சே...


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி