உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாணவர்களுக்கு 150 புதிய விடுதிகள் 

மாணவர்களுக்கு 150 புதிய விடுதிகள் 

பெங்களூரு: ''பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தங்குவதற்கு வசதியாக புதிதாக 150 தங்கும் விடுதிகள்கட்டப்படும்,'' என,பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்சிவராஜ் தங்கடகிகூறினார். கர்நாடக சட்டமேலவையில் பா.ஜ., உறுப்பினர் பாப்பண்ணா தலவார் கேட்ட கேள்விக்கு, பிற்படுத்தப்பட்டோர் நல அமைச்சர் சிவராஜ் தங்கடகி அளித்த பதில்:பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மாணவர்கள் தங்குவதற்கு வசதியாக, புதிய விடுதிகள்கட்டப்படும் என்று, கடந்த பட்ஜெட்டில் முதல்வர் சித்தராமையா அறிவித்தார்.மாணவர்கள் வசதிக்காக 150 புதிய விடுதிகள் கட்டப்படும். இதில்75 பெண்கள், 75 ஆண்கள் விடுதி ஆகும்.மைசூரு, தார்வாட், பெலகாவி மாவட்டங்களில் புதிய விடுதிகட்ட அதிக முன்னுரிமை அளிக்கப்படும்.விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ - மாணவியருக்கு தரமான உணவு வழங்க உத்தர விடப்பட்டுள்ளது.மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உணவு பொருட்கள் சோதனை செய்யப்படும்.மாணவர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பு. இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி