உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சட்டவிரோத 1,700 சிலிண்டர்கள் பறிமுதல்: 2 பேர் பிடிபட்டனர்

சட்டவிரோத 1,700 சிலிண்டர்கள் பறிமுதல்: 2 பேர் பிடிபட்டனர்

புதுடில்லி:சட்டவிரோதமாக காஸ் சிலிண்டர் தயாரித்து விற்று வந்த இருவரை கைது செய்த போலீசார், 1,699 சிலிண்டர்கள் பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து, டில்லி மாநகரப் போலீசின் புறநகர் துணை கமிஷனர் ஜிம்மி சிராம் கூறியதாவது:சட்டவிரோதமாக சிலர் காஸ் சிலிண்டர் தயாரித்து விற்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் ரன்ஹோலா மற்றும் நிஹால் விஹார் பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.அங்கு இரண்டு இடங்களில் சட்டவிரோத நடத்தப்பட்டு வந்த காஸ் சிலிண்டர் கிடங்குகள் கண்டுபிடிக்கப்பட்டன. அங்கிருந்து வணிக மற்றும் வீட்டு உபயோக 1,699 காஸ் சிலிண்டர்கள் மற்றும் 17 காஸ் நிரப்பும் பம்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த கிடங்குகளை நடத்தி வந்த உதய் சிங்,34, ரவி குரானா,34 ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.இருவரும் பல்வேறு காஸ் நிறுவனங்களிடம் இருந்து வீட்டு உபயோக சிலிண்டர்களை வாங்கி, அதில் இருந்து வெவ்வேறு அளவுகளில் சிலிண்டர்களில் காஸ் நிரப்பி அதிக விலைக்கு விற்றுள்ளனர். இருவரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை