உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜம்மு - காஷ்மீரில் என்கவுன்டர் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு - காஷ்மீரில் என்கவுன்டர் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர், ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள ரெட்வானி கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து கடந்த 6ம் தேதி இரவு பாதுகாப்பு படையினர், உள்ளூர் போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வீடு ஒன்றில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படை சுட்டதில், பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீடு தீப்பற்றி எரிந்தது. தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே நடந்த சண்டையில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 'சடலங்கள் மீட்கப்பட்ட பிறகே, இறந்த பயங்கரவாதிகள் யார் என்ற விபரம் தெரியவரும்' என போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ