உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரஷ்யா, ஆஸ்திரியாவுக்கு 3 நாள் பயணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி பதிவு

ரஷ்யா, ஆஸ்திரியாவுக்கு 3 நாள் பயணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி பதிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'ரஷ்யா, ஆஸ்திரியா நாடுகளுடன் உறவுகளை ஆழப்படுத்த 3 நாட்கள் பயணம் அருமையான வாய்ப்பாக இருக்கும்' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.ரஷ்ய அதிபர் புடின் அழைப்பின் பேரில் இன்று (ஜூலை 08) மாஸ்கோ புறப்பட்ட பிரதமர் மோடி, இந்தியா - ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். நாளை (ஜூலை 9) ஆஸ்திரியா செல்லும் அவர், அந்நாட்டு பிரதமர் அலெக்சாண்டர் வேன் டெர் பெலனை சந்தித்து பேசுகிறார். ரஷ்யா, ஆஸ்திரியாவுக்கு 3 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், எக்ஸ் சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில்,'' ரஷ்யா, ஆஸ்திரியா நாடுகளுடன் உறவுகளை ஆழப்படுத்த இந்த பயணம் அருமையான வாய்ப்பாக இருக்கும். இரு நாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினருடன் தொடர்பு கொள்வதை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன். இந்தியா - ரஷ்யா உடனான உறவு கடந்த 10 ஆண்டுகளில் முன்னேற்றம் கண்டுள்ளது,'' எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

தேச நேசன்
ஜூலை 08, 2024 15:01

உலகத்தலைவர் மோடிஜி வாழ்க வளர்க. இண்டியா கூட்டணி கூச்சல் அதிகரிக்கலாம். அவர்களால் கூச்சல் மட்டுமே போட முடியும்.


Apposthalan samlin
ஜூலை 08, 2024 13:28

ஆஸ்திரியா சுற்றி பார்ப்பதற்கு சிறந்த இடம்


அப்புசாமி
ஜூலை 08, 2024 12:32

சொகுசு விமானத்தில் போய் பேசிட்டு வருவது நெகிழ்ச்சியாக இருக்கு.


தத்வமசி
ஜூலை 08, 2024 12:52

துபாய்க்கு சென்ற பயணம் இல்லை இது.


Lion Drsekar
ஜூலை 08, 2024 12:27

குறுநில மன்னகுரலுக்கு இந்தியா என்றால் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்வார்கள் அதுவரை அவர்களுக்கு அது ஒரு எட்டாக்கனியாக இருக்கும்வரை பாகிஸ்தானை விட எதிரியாகவே பார்ப்பார்கள் , செயல்படுவார்கள் . அப்படி இருக்க உலக நாடுகளுக்கு இந்தியா என்றால் மட்டுமே தெரியும் ஆகவே என்று வாருங்கள், நாட்டுக்கும் மக்களுக்கும் வளம்சேர்க்கும் விதத்தில் இருந்தால் வரவேற்கப்படும், வந்தே மாதரம்


sivakumar Thappali Krishnamoorthy
ஜூலை 08, 2024 11:58

பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள நல்ல பதிலடி கொடுத்துவிட்டு நம் தலைவர் வெளிநாடு பிரயாணம் வெகு ஜோர்....கதறல் கேட்ட்க நல்ல இருக்கு.


Senthoora
ஜூலை 08, 2024 13:11

சென்று வா மகனே, வென்று வா.


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி