உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யானை தந்தம் கடத்திய 3 பேர் கைது

யானை தந்தம் கடத்திய 3 பேர் கைது

எலஹங்கா: யானை தந்தம் விற்க முயன்ற, மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூரில் இருந்து பெங்களூருவுக்கு, காரில் யானை தந்தங்கள் கடத்தப்படுவதாக, எலஹங்கா வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.ராஜானுகுண்டே பகுதியில் வனத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த காரை நிறுத்தினர்.காருக்குள் சோதனை நடத்தியபோது, 8.50 மற்றும் 9 கிலோ எடை கொண்ட, இரண்டு யானை தந்தங்கள் இருந்தன. அவை பறிமுதல் செய்யப்பட்டன.காரில் வந்த மூன்று பேரிடம் விசாரித்தபோது, யானை தந்தங்களை விற்பனை செய்ய கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டனர். மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.விசாரணையில் அவர்கள் தொட்டபல்லாபூரின் மோகன், 45, ஆனந்த், 40, வினோத், 38, என்பது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை