உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பங்குச் சந்தை ஆசை காட்டி மக்களை ஏமாற்றிய 3 பேர்

பங்குச் சந்தை ஆசை காட்டி மக்களை ஏமாற்றிய 3 பேர்

பிதம்புரா: பங்குச் சந்தையில் அதிக லாபம் ஈட்டுவதாகக் கூறி, மக்களை ஏமாற்றிய மூன்று இணைய குற்றவாளிகளை சைபர் கிரைம் பிரிவு போலீசார் கைது செய்தனர்.டில்லியில் உள்ள பிதம்புராவைச் சேர்ந்த விஷால் என்பவர், சைபர் காவல் நிலையத்தில் 1ம் தேதி அளித்த புகாரில், சமூக வலைதளங்களில் தென்பட்ட விளம்பரத்தை நம்பி, 22 லட்சம் ரூபாயை முதலீடு செய்ததாக கூறியிருந்தார்.பணத்தை மோசடி செய்தவர்களின் தடங்களை கண்டுபிடித்த சைபர் கிரைம் போலீசார், 6ம் தேதி, காரரில் இருந்து கபில் குரு, 47, என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின்பேரில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சென்ற போலீசார், ஹரேந்தர் சிங் ரத்தோர், 42, லக்ஷ்மி காந்த், 47, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.மோசடிக்கு ஆதாரமாக நான்கு மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை