உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போதையில் தண்டவாளத்தில் துாங்கிய 3 வாலிபர்கள் பலி

போதையில் தண்டவாளத்தில் துாங்கிய 3 வாலிபர்கள் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொப்பால்: கர்நாடகாவில் போதையில் ரயில் தண்டவாளத்தில் படுத்து துாங்கிய மூன்று இளைஞர்கள் ரயில் மோதி உயிரிழந்தனர்.கர்நாடக மாநிலம், கொப்பால் மாவட்டம், கங்காவதி நகரத்தைச் சேர்ந்தவர் மவுனேஷ் பத்தாரா, 23. அன்னுாரின் கவுரம்மா கேம்ப் என்ற பகுதியில் வசித்தவர் சுனில் திம்மண்ணா, 23. ஹிரேஜந்தகல்லில் வசித்தவர் வெங்கட பீமராய், 20. இவர்கள் மூவரும் நண்பர்கள்.நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில் மூவரும், கங்காவதி ரயில் நிலையம் அருகில் தண்டவாளம் பக்கத்தில் அமர்ந்து மது அருந்தினர். பார்சல் வாங்கி வந்திருந்த உணவையும் அங்கேயே வைத்து சாப்பிட்ட அவர்கள், போதை தலைக்கேறிய நிலையில் தண்டவாளத்திலேயே படுத்து துாங்கினர்.இரவு அந்த வழியாக வந்த, ஹூப்பள்ளி - சிந்தனுார் பாசஞ்சர் ரயில் மோதியதில், மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காலை, அவர்களது உடல்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

subramanian
ஜூலை 20, 2024 23:20

போதை புழக்கம் அதிகரித்து வருகிறது. நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு.


aaruthirumalai
ஜூலை 20, 2024 12:02

வல்லரசு இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள், வாழ்க வளர்க! மது அருந்துவதில் ஒருவித பழக்கத்தை உருவாக்குவது நல்லது. வெளிநாட்டவர் போல் ஸ்டைல் தேவை.


Jai
ஜூலை 20, 2024 11:46

நாளைய இந்தியாவின் தூண்கள் ஆன இந்த இளைஞர்கள் இவ்வாறு இறப்பது படிப்பதற்கு மிகவும் வருத்தமாக உள்ளது. உலகம் முழுவதும் தொழில் நடத்துவதற்கும் வேலைகளை பெறுவதற்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. நமது இளைஞர்களின் எதிர்காலம் சிறக்க நல் ஒழுக்கங்களில் அவர்களை ஈடுபடுத்தி உலகத்தின் மிகச் சிறந்த தொழிலாளர்களாக இன்ஜினியர்களாக டாக்டர்களாக தொழில் முனைவோர்களாக ஆராய்ச்சியாளர்களாக மாற்ற வேண்டியது அரசின் கடமை. இளைஞர்கள் இப்படி குடித்து அழிவதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது அது எந்த அரசாக இருந்தாலும்...


Sampath Kumar
ஜூலை 20, 2024 09:33

இது தமிழ் நாட்டிலும் நடக்க வேண்டும் ன்று ஒரு அய்யோக்கிய அசிங்கம் பிடித்த கும்பல் வேண்டி கொள்ளகிறது அந்த கும்பலுக்கு சொல்வது எல்லாம் நினைப்புதாண் பிழைப்பை கேடுக்கும்


Anand
ஜூலை 20, 2024 10:57

அது யாருமில்லை, கண்ணாடியை பார்த்து பேசிக்கொண்டது.


theruvasagan
ஜூலை 20, 2024 22:21

அசிங்கம் பிடித்த கும்பல்னா கள்ளக்குறிச்சியில் 60க்கும் மேற்பட்ட உயிர்கள் போக காரணமாக இருந்தாங்களே. அவனுகதானே.


Kasimani Baskaran
ஜூலை 20, 2024 07:30

நல்ல வேளையாக இது கர்நாடகாவில் நடந்ததால் உபிஸ் நிம்மதியடைந்தனர். ஒரு பிரச்சினை என்றால் அது பெரிய சிக்கலாகிவிடும் என்ற பயத்தில் இருந்தார்கள்...


RAAJ68
ஜூலை 20, 2024 07:18

விடியல் தோற்று விட்டது. எங்களால் இதை அனுமதிக்க முடியாது.


chandrakumar
ஜூலை 20, 2024 06:57

மதுவில் அல்லது உணவில் ஏதோ மயக்க மருந்து அல்லது விஷம் கலந்திருக்கலாம் ரயில் வருவது தெரியாத அளவுக்கு ஒன்று போல் மூவருக்கும் போதை ஏறியது சந்தேகமாக உள்ளது


இவன்
ஜூலை 20, 2024 06:03

10 லட்சம் பணம் வாங்கி இருக்கலாம் ??


Iniyan
ஜூலை 20, 2024 04:07

நாட்டில் மூன்று குடிகாரர்களின் எண்ணிக்கை குறைந்தது


sankaranarayanan
ஜூலை 20, 2024 01:41

போதையில் இருப்பவர்கள் சாவதைத்தான் விரும்புவார்கள் போலிருக்கிறது


Neo Aryan
ஜூலை 20, 2024 10:44

?ஹஹஹ அப்படித்தான் போலிருக்கு.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை