உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "இந்தியா பல நாடுகளுக்கு முன்னுதாரணம்": மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்

"இந்தியா பல நாடுகளுக்கு முன்னுதாரணம்": மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: இன்று இந்தியா பல நாடுகளுக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளது என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்த நிகழ்ச்சியில் ஜெய்சங்கர் பேசியதாவது: உலகிற்கு உத்வேகம் அளிக்கும் ஒரு ஜனநாயக நாடாக இந்தியா திகழ்கிறது. இன்று இந்தியா பல நாடுகளுக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், ஜனநாயக நாடு என்பதை நிரூபித்துள்ளோம். கொரோனா தொற்று பாதிப்பிற்கு, பிறகு நாம் 7 சதவீத பொருளாதார வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம்.இது பாராட்டக்கூடிய விஷயமாகும். இந்தியாவின் முன்னேற்றத்தை உலக நாடுகள் கவனிக்கிறது. உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ், 90 கோடி பேர் பலன் அடைந்துள்ளனர். பெண்களுக்கான பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தினால், 42 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Pandianpillai Pandi
ஏப் 02, 2024 14:40

காங்கிரசில் ஆட்சியில் நாட்டு பற்றுமிக்கவராக புகழுடன் வளம் வந்த தாங்கள் பா ஜ க வில் நாட்டுபற்றை விட நடப்புகளை பூசி முழுகுவதில் கவனம் செலுத்துகீர்கள் சீனா நம் நாட்டின் பகுதிகளுக்கு பெயர் வைத்து வரைபடம் வெளியிடுகிறது இதை வன்மையாக எதிர்கொள்ளாமல் பெயர் வைத்தால் என்னவாகி விடபோகிறது என்று சொல்கீறீர்கள் உலக நாடுகள் சீனா வைத்த பெயர் தெருக்களை வைத்து அஞ்சல்களை அந்த விலாசத்தில் வீட்டு பெயர் தானே மாறியிருக்கிறது என்று டெலிவரி கொடுத்துவிடுங்கள் என்று இந்தியாவை பார்த்து சொன்னால் என்ன செய்வீர்கள் சிறு நாடான இலங்கையிலிருந்து கச்சதீவை மீட்க வழி செய்யாமல் பழைய கதையை மெருகேற்றி சொல்கிறீர்கள் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் ஏன் பா ஜ க வந்தால் நாட்டிற்கு பேராபத்து என்று சொல்கிறார் எனபதை உணர முடிகிறது உங்கள் மீதான நம்பிக்கை இழந்த ஒரு குடிமகனாக தான் என்னை உணர்கிறேன்


ஆரூர் ரங்
ஏப் 02, 2024 22:28

நான் கூட முதல்வர் பெயரை சுருக்கி செல்லமாக ஒரு பெயர் வைத்தேன். கொஞ்ச நாள் கழித்து மலர் அதனை சென்சார் செய்து விட்டது. அதனால் முதல்வருக்கு லாபமா நஷ்டமா?


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ