உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 6 பேர் பலி: 10 பேர் மாயம்

ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 6 பேர் பலி: 10 பேர் மாயம்

ஸ்ரீநகர்: ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 10 பேர் மாயமாகியுள்ளதால், மீட்புபணிகள் நடந்து வருகிறது.ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகரின் ஜீலம் ஆற்றில் 12 பள்ளி மாணவர்கள் உட்பட பல பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது. இந்த படகில் பயணம் செய்த பலர் மாயமாகி உள்ளனர். மீட்பு படையினர் ஏழு பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 6 பேர் உயிரிழந்துவிட்டனர் என மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மீதமுள்ள 3 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர் மாயமாகியுள்ளதால், மீட்பு பணிகள் நடந்து வருகிறது. மாநில பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். சிறிய படகில் நிறைய பேர் பயணம் செய்ததால், விபத்து ஏற்பட்டு இருக்கும் எனக் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை