| ADDED : ஜூன் 26, 2024 01:27 AM
சென்னை, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம், அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் டில்லியில் நேற்று நடந்தது. இதில், தமிழக நீர்வளத் துறை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 'தமிழகத்திற்கு காவிரி நீர் வரத்து குறைந்து வருகிறது. 'எனவே முறைப்படி நீர் திறக்க வேண்டும். ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி., நீரும், ஜூலையில் 31.24 டி.எம்.சி., நீரும் திறக்க வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டது. 'அணைகளில் நீர் போதுமான இல்லை' என, கர்நாடகா தரப்பில் கைவிரிக்கப்பட்டது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தீவிரம் அடைந்த பின், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க, ஆணையம் திட்டமிட்டு உள்ளது.