உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காலிஸ்தான் பயங்கரவாதி லக்பீர் லாண்டாவின் கூட்டாளிகள் 5 பேர் கைது

காலிஸ்தான் பயங்கரவாதி லக்பீர் லாண்டாவின் கூட்டாளிகள் 5 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: காலிஸ்தான் பயங்கரவாதி லக்பீர் லாண்டாவின் கூட்டாளிகள் 5 பேர் பஞ்சாப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது குறித்து பஞ்சாப் டி.ஜி.பி., கவுரவ் யாதவ் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கனடாவைச் சேர்ந்த பயங்கரவாதி லக்பீர் லாண்டாவின் கூட்டாளிகள் 5 பேரை ஜலந்தர் மாவட்ட போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இந்த கும்பல் பஞ்சாப்பின் பல மாவட்டங்களில் மக்களை மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை, லக்பீர் லாண்டாவின் கூட்டாளிகள் 13 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். பஞ்சாப் முதல்வர் பகவந்த்மானின் வழிகாட்டுதலின்படி மாநிலத்தில் நடக்கும் குற்றங்களை ஒழிக்க போலீஸ் படை முழுமையாக உறுதிபூண்டுள்ளது. அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

என்றும் இந்தியன்
ஜூலை 14, 2024 17:52

நடப்பது யாருடைய ஆட்சி???ஆம் ஆத்மி தானே???அப்போ நிச்சயம் காலிஸ்தான் தீவிரவாதிகளை ஆதரிக்கும் கட்சி தானே அது???


Rajah
ஜூலை 14, 2024 14:33

சமூகநீதிக்கு எதிரான செயல்.


S. Gopalakrishnan
ஜூலை 14, 2024 14:31

முதல் மந்திரி திரு. பகவந்த் மான் வழி காட்டியதால் பயங்கரவாதிகளை பிடித்தார்கள். இல்லாவிட்டால் சம்பளம் வாங்கிக் கொண்டு நாற்காலியை தேய்த்து ஓய்வு பெற்றிருப்பார்கள் !


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி