உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜார்க்கண்டில் என்கவுன்டர் 5 நக்சல்கள் சுட்டுக்கொலை

ஜார்க்கண்டில் என்கவுன்டர் 5 நக்சல்கள் சுட்டுக்கொலை

சைபாசா, ஜார்க்கண்டில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில், ஒரு பெண் உட்பட ஐந்து நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.ஜார்க்கண்டில் முதல்வர் சம்பாய் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, நக்சல் அமைப்பின் நடவடிக்கைகளை ஒடுக்கும் வகையில் ஜார்க்கண்ட் போலீஸ் பிரிவில் சிறப்பு அதிரடிப் படைகளாக ஜாக்குவார், கோப்ரா உள்ளிட்டவை இயங்கி வருகின்றன.இப்படைகளுடன் சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் இணைந்து, நக்சல்களை ஒடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் நக்சல் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, அப்பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினர் நேற்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது டோன்டோ மற்றும் கோய்ல்கேரா ஆகிய பகுதிகளில் ரோந்து சென்றபோது அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு, பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர். இதில், ஒரு பெண் உட்பட ஐந்து நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இறந்தவர்களில் மூன்று பேர், நக்சல் அமைப்பின் கமாண்டர்களாக இயங்கியது தெரியவந்துள்ளது. இது தவிர, ஒரு பெண் உட்பட இரண்டு நக்சல்களையும் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை