உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடகாவில் 24 மணி நேரத்தில் சாலை விபத்தில் 51 பேர் பலி

கர்நாடகாவில் 24 மணி நேரத்தில் சாலை விபத்தில் 51 பேர் பலி

பெங்களூரு: கர்நாடகாவில் 24 மணி நேரத்தில் பல பகுதிகளில் நடந்த விபத்தில், 51 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறை ஏ.டி.ஜி.பி., அலோக் குமார், 'எக்ஸ்' வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.ஹாசன் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 6:30 மணியளவில் நடந்த சாலை விபத்தில் சிறுவன் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் பலியான நாராயணப்பா - சுனந்தா தம்பதியின் மூன்று குழந்தைகள் ஆதரவற்று தவிக்கின்றனர்.இது தொடர்பாக, போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறை ஏ.டி.ஜி.பி., அலோக் குமார், 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளதாவது:ஹாசனில் நடந்த சாலை விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர். கடந்த 24 மணி நேரத்தில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த விபத்துகளில், 51 பேர் உயிரிழந்து உள்ளனர். இதில் பெரும்பாலானவை அதிவேகம், அக்கறையின்மையே காரணம். அனைவரும் சாலை விதிகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.இதற்கு முன் அதிகபட்சமாக, 2023ம் ஆண்டு ஒரே நாளில் நடந்த விபத்துகளில், 34 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துகள் பெரும்பாலும் வார இறுதி நாட்களில் நடக்கின்றன.போக்குவரத்து நிபுணர் ஸ்ரீஹரி கூறுகையில், ''சாலை விதிகளை கடைப்பிடிப்பதில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஓட்ட தெரியாமல் வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் நடக்கின்றன.ஓட்டுனர் உரிமம் பெற வருவோரிடம், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கடுமையான விதிகளை பின்பற்ற வேண்டும்,'' என்றார்.கலபுரகி மாவட்டம், கின்னி சதக் கிராமத்தை சேர்ந்தவர்கள் சமீர் ஜமீர் சாப், 22, விஷால் சஞ்சய் குமார் ஜாதவ், 20, சந்திரகாந்தா நிங்கப்பா, 23. நேற்று காலை மூவரும், ஒரே இரு சக்கர வாகனத்தில் கமல்புர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.கலபுரகியில் இருந்து ஹூம்னாபாத்துக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. கமல்புர் அருகே செல்லும் போது, இரு சக்கர வாகனம் மீது, அரசு பஸ் மோதியது. இதில், மூவரும் சம்பவ இடத்தில் பலியாகினர். கமல்புர் போலீசார் விசாரிக்கின்றனர்.

பஸ் மோதி மூவர் பலி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி