உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆந்திரா சாலை விபத்து பஸ் எரிந்து 6 பேர் பலி

ஆந்திரா சாலை விபத்து பஸ் எரிந்து 6 பேர் பலி

அமராவதி: ஆந்திராவில், மணல் லாரி மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.ஆந்திர மாநிலம், பலநாடு மாவட்டம், சிலகலுாரிபேட்டா பகுதியில் நேற்று முன்தினம் மணல் லாரி மீது தனியார் பஸ் மோதியது. சின்னகஞ்சம் பகுதியில் இருந்து பயணியரை ஏற்றிக்கொண்டு ஹைதராபாதிற்கு அந்த பஸ் சென்று கொண்டிருந்தது.தேர்தலுக்காக சொந்த ஊர் சென்ற பலரும் அந்த பஸ்சில் ஹைதராபாத் திரும்பிக் கொண்டு இருந்தனர்.பலநாடு மாவட்டம் சிலகலுாரிபேட்டா அருகே சென்ற போது, எதிரே மணல் ஏற்றி வந்த லாரி மீது பஸ் மோதியது. விபத்து நடந்த சில வினாடிகளில் பஸ் தீப் பிடித்து எரிய துவங்கியது.இந்த விபத்தில் பஸ் மற்றும் லாரின் ஓட்டுனர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர்.காயங்களுடன் 20 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஉள்ளனர்.தகவல் கிடைத்து தீயணைப்பு வாகனம் வருவதற்குள் பஸ்சும், லாரியும் முற்றிலுமாக எரிந்து உருக்குலைந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை