உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.975 கோடி கடன் மோசடி: சொகுசு கார்கள் பறிமுதல்

ரூ.975 கோடி கடன் மோசடி: சொகுசு கார்கள் பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிராவில், 975 கோடி ரூபாய் வங்கிக் கடன் மோசடி வழக்கில் மூன்று சொகுசு கார்கள், உயர் ரக வாட்சுகள் மற்றும் 140க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை அமலாக்கத் துறையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.மஹாராஷ்டிராவின் மும்பையை தலைமையிடமாக வைத்து 'மந்தனா இண்டஸ்ட்ரீஸ்' என்ற ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் தற்போது 'ஜி.பி., குளோபல்' என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.இந்த நிறுவனம் பாங்க் ஆப் பரோடாவில், 975.08 கோடி ரூபாய் வங்கிக் கடன் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.இது குறித்து வங்கி தரப்பில் சி.பி.ஐ.,யில் புகார் தரப்பட்டது. பணமோசடி வழக்கு என்பதால் இது குறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த நிறுவனத்தின் இயக்குனர்களான புருஷோத்தம் மந்தனா, மனீஷ் மந்தனா, பிஹாரிலால் மந்தனா ஆகியோர் மோசடியான பண பரிவர்த்தனைகள் வாயிலாக வங்கிக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.நிறுவனத்தின் ஊழியர்களின் பெயரில், போலி நிறுவனங்களை உருவாக்கி, வாங்கிய கடனை முறைகேடாக பயன்படுத்தியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, மந்தனா நிறுவனத்துக்கு சொந்தமான மும்பையில் உள்ள, 12 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, மூன்று விலையுயர்ந்த சொகுசு கார்கள், உயர் ரக வாட்சுகள், டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதுமட்டுமின்றி, 5 கோடி ரூபாய் பங்குகள் மற்றும் பத்திரங்கள், ஐந்து லாக்கர்கள், 140க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் அமலாக்கத் துறை அதிகாரிகளால் முடக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

subramanian
ஜூன் 29, 2024 15:33

முதலில் இவர்களின் செல்போனேகளை பறிமுதல் செய்ய வேண்டும். இவர்களை வீட்டு சிறையில் அடைக்க வேண்டும். இவர்களின் வக்கீலிடம் பேசுவதை ஒளிப்பதிவு செய்ய வேண்டும். இவர்களின் கார், பைக் பாஸ்போர்ட் , வங்கிக்கணக்குகள் , டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, மற்ற பணம் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் பறிமுதல் செய்ய வேண்டும். முதலில் பணத்தை கட்டிவிட்டு பின்னர் வேறு வேலை பார்க்க அனுமதிக்க வேண்டும்.


subramanian
ஜூன் 29, 2024 15:27

இதே இண்டி கூட்டணி / இந்திரா காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால் , இந்த செய்தியே வெளியில் தெரியாது. அப்படியே அமுக்கி விட்டு இருப்பார்கள்.


Indhuindian
ஜூன் 29, 2024 06:00

யானை பசிக்கு சோளப்பொரி அடிச்சது 975 கோடி புடிச்சது ஒரு சில கோடி அவங்கள்லாம் வூர்ல இருக்காங்களா இல்லே ஓடிபுட்டங்களானு சொல்லுங்க ஓடிபோலென்ன அப்படியே அமுக்குங்க இல்லேன்னா நீரவ் மோடி, விஜய் மல்லையா மாதிரி வெளிநாட்டு கோர்டுக்கெல்லாம் ஏறி இறங்கி அவங்களை இங்கே கொண்டு அதுக்கு மாமாங்கம் ஆயிடும் அப்புறம் ஆறின கஞ்சி பஷ்ங்கஞ்சி ஆனா கதைதான்


ஆரூர் ரங்
ஜூன் 29, 2024 10:39

பிளாக் மெய்ல் பண்ணி லஞ்சம் வாங்கவே சில நாடுகள் கிரிமினல் ஆட்களுக்கு அடைக்கலம் கொடுக்கின்றன. தப்பிப் போகாம இங்கேயே ஜாலியா இருக்க எல்லோரும் பொன்முடி வழியில் சமாளிக்க வேண்டியதுதானே?


மேலும் செய்திகள்





புதிய வீடியோ