உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போலி முகநுால் கணக்கு யதீந்திரா பெயரில் துவக்கம்

போலி முகநுால் கணக்கு யதீந்திரா பெயரில் துவக்கம்

பெங்களூரு : முதல்வர் சித்தராமையாவின் மகன் யதீந்திரா. இவரது பெயரில் மர்ம நபர்கள், முகநுால் கணக்கு துவங்கினர். முகநுாலின் முகப்பு பக்கத்தில், யதீந்திராவின் புகைப்படத்தை பதிவிட்டனர். அந்த முகநுால் பக்கத்தில், காங்கிரஸ் தலைவர்கள் சிலரை பற்றி, அவதுாறு கருத்துக்களை பதிவு செய்தனர்.கடந்த சட்டசபை தேர்தலில், ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட, குஸ்மாவை பற்றியும், அவதுாறு கருத்துக் கள் பதிவு செய்யப்பட்டன. முதல்வர் சித்தராமையா, திப்பு சுல்தான் புகைப்படத்தை பதிவிட்டு, உண்மையான நண்பர்கள் என்றும் கூறி இருந்தனர். இதுபற்றி அறிந்த காங்கிரஸ் பிரமுகர் ஷசாங்க் கவுடா, ஜாலஹள்ளி போலீசில் புகார் அளித்தார்.'தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் தலைவர்களை பற்றி, எதிர்க்கட்சியினர் அவதுாறு கருத்து பரப்புகின்றனர். தோல்வி பயத்தில் யதீந்திரா பெயரில், போலி முகநுால் கணக்கு துவங்கி உள்ளனர்' என்று, ஷசாங்க் கவுடா கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை