| ADDED : ஜூலை 04, 2024 02:36 AM
தலகட்டாபூர்: காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், காதல் ஜோடி ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.பெங்களூரு கோணனகுண்டேயில் வசித்தவர் ஸ்ரீகாந்த், 25. தலகட்டாபூர் அருகே அஞ்சனபுராவை சேர்ந்தவர் அஞ்சனா, 20.இவர்கள் இருவரும், இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆனால், காதலுக்கு இருவரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில் கடந்த 1ம் தேதி அவரவர் வீடுகளில் இருந்து ஸ்ரீகாந்த், அஞ்சனா வெளியேறினர். பின்னர் இருவரும் மாயமாகினர். இதுகுறித்து தலகட்டாபூர், கோணனகுண்டே போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவாகி இருந்தது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நைஸ் ரோடு அருகே உள்ள குளத்தில், இளம்பெண், வாலிபர் உடல் மிதந்தது.தலகட்டாபூர் போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டனர். விசாரணையில் அவர்கள் மாயமான ஸ்ரீகாந்த், அஞ்சனா என்று தெரிந்தது.ஏரிக்கரை அருகே ஒரு காரும் நின்றது. அந்த காரில் இருந்த, மொபைலை எடுத்து பார்த்த போது அஞ்சனா பேசிய வீடியோ இருந்தது.அதில், 'எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எங்களால் ஒன்றாக வாழ முடியாது. இதனால் ஒன்றாக உயிரை விட முடிவு செய்துள்ளோம்' என்று பேசியிருந்தார்.இதன்மூலம் அவர்கள் இருவரும் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.