உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாராசூட்டில் வந்து விழுந்த வானிலை ஆய்வு கருவி

பாராசூட்டில் வந்து விழுந்த வானிலை ஆய்வு கருவி

விஜயபுரா : விஜயபுராவில் வானத்தில் இருந்து பாராசூட் மூலம் பண்ணை நிலத்தில் விழுந்த வானிலை ஆராய்ச்சிக் கருவியை மாவட்ட நிர்வாகம் கைப்பற்றியது.நேற்று காலை வானத்தில் இருந்து பாராசூட் மூலம் ஏதோ ஒன்று வருவதை, விஜயபுரா மாவட்டத்தின் சட்சனின் மரகூரு கிராம மக்கள் பார்த்தனர். அந்த பாராசூட், பண்ணை நிலத்தில் விழுந்தது. அங்கு கிராமத்தினர் சென்று பார்த்தனர். போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த சட்சன் போலீசார் மற்றும் தாசில்தார், அந்த கருவியை ஆய்வு செய்தனர்.அதை வருவாய்த் துறையினர் மீட்டனர். அந்த கருவி, ஹைதராபாதை தளமாக கொண்ட, 'டாடா இன்ஸ்டிடியூட் ஆப் பண்டமென்டல் ரிசர்ச்' நிறுவனம் மூலம் விண்ணில் ஏவப்பட்ட வானிலை ஆராய்ச்சி அறிவியல் கருவி என்பது தெரியவந்தது.கலெக்டர் பூபாலன் கூறுகையில், ''கருவி குறித்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் தகவல் அளிக்கப்பட்டு உள்ளது. அந்நிறுவன அதிகாரிகள் குழுவினர் விரைவில் மாவட்டத்துக்கு வர உள்ளனர். ''மேலும், வயலில் கிடக்கும் பாராசூட்கள், கருவிகள் பத்திரமாக எடுத்து வைக்கப்பட்டுள்ளன. எனவே மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்,'' என்றார்.வானத்தில் ருந்து கீழே விழுந்த ஆராய்ச்சிக் கருவி. இடம்: விஜயபுரா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை