உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பன்னரகட்டா உயிரியல் பூங்காவிற்கு புது வரவு  

பன்னரகட்டா உயிரியல் பூங்காவிற்கு புது வரவு  

பெங்களூரு : பன்னரகட்டா உயிரியல் பூங்காவிற்கு புது வரவாக, சிங்கப்பூர் விலங்கியல் பூங்காவில் இருந்து, ஆறு ஹமர்தியாஸ் இன குரங்குகள் கொண்டு வரப்பட்டு உள்ளன.பெங்களூரு பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி உள்ளிட்ட வனவிலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ், சிங்கப்பூர் விலங்கியல் பூங்காவில் இருந்து ஹமர்தியாஸ் இனத்தின் 6 குரங்குகள், பன்னரகட்டா உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டது. இதில் இரண்டு பெண் குரங்கு ஆகும்.பூங்காவின் கால்நடை பராமரிப்பு துறை வழிகாட்டுதல்படி, குரங்குகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. ஒரு மாதத்திற்கு பின்னர், சுற்றுலா பயணியர் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என்று, பூங்கா நிர்வாகம் அறிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி