உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிவகுமாருக்கு எதிரான போஸ்டரால் பரபரப்பு

சிவகுமாருக்கு எதிரான போஸ்டரால் பரபரப்பு

' பெங்களூரு : ஹாசன் ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ பின்னணியில், துணை முதல்வர் சிவகுமார் இருப்பதாக வக்கீலும், பா.ஜ., பிரமுகளுமான தேவராஜே கவுடா குற்றம்சாட்டிய நிலையில், சிவகுமாருக்கு எதிராக இரவோடு இரவாக போஸ்டர்கள் ஒட்டியது, பரபரப்பை ஏற்படுத்தியது.எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவின், ஆபாச வீடியோ விஷயம் அரசியலாக மாறுகிறது. ஆளுங்கட்சிகள், எதிர்க்கட்சிகள் பரஸ்பரம் சேற்றை வீசி கொள்கின்றன. பென் டிரைவ் விஷயத்தில், துணை முதல்வர் சிவகுமாரின் பங்களிப்பு உள்ளதாக, பா.ஜ., தலைவர் தேவராஜேகவுடா ஊடகத்தினர் முன்னிலையில், குற்றம்சாட்டியுள்ளார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் பெங்களூரின் பல்வேறு இடங்களில், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாரை விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இரவோடு, இரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்களில், 'சிவகுமார் பெண்களின் வீடியோக்களை பயன்படுத்தி, அரசியல் செய்கிறார். பெண்களை சப்ளை செய்யும் புரோக்கர், அவர்களை வைத்து வியாபாரம் செய்பவர்' என, பல கடுமையான வாசகங்கள் உள்ளன.இந்த போஸ்டர்களை ஒட்டியது யார் என்பது தெரியவில்லை. அடையாளம் தெரியாத நபர்கள், நகரின் பல இடங்களில் ஒட்டி உள்ளனர். இவற்றை நேற்று காங்கிரசார் கிழித்து எறிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ