உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இரும்பு கம்பி வாங்க முயன்று  ரூ.14 லட்சம் இழந்த தனியார் ஊழியர்

இரும்பு கம்பி வாங்க முயன்று  ரூ.14 லட்சம் இழந்த தனியார் ஊழியர்

துமகூரு: ஆன்லைன் மூலம், வீடு கட்டுவதற்கு இரும்புக் கம்பி வாங்க முயன்று, தனியார் நிறுவன ஊழியர் 14 லட்சம் ரூபாய் இழந்துள்ளார்.துமகூரின் சிரா கேட்டில் வசிப்பவர் ராஜண்ணா, 42. தனியார் நிறுவன ஊழியர். சிரா கேட் அருகே அந்தர்சன் கிராமத்தில் புதிய வீடு கட்டுகிறார்.கட்டுமான பணிக்கு குறைந்த விலையில் எங்கு இரும்புக் கம்பி கிடைக்கிறது என்று, கூகுளில் தேடினார். விசாக் ஸ்டீல் என்ற நிறுவனத்தின் பெயர் வந்தது.கூகுளில் இருந்த மொபைல் நம்பரை எடுத்து தொடர்பு கொண்டார். எதிர்முனையில் பேசிய நபர் 14,12,286 ரூபாய் அனுப்பினால், இரும்புக் கம்பிகளை அனுப்பி வைப்பதாக கூறினார்.இதை நம்பிய ராஜண்ணா கூகுள்பே, போன் பே மூலம் பணம் அனுப்பி வைத்தார். ஆனால் இரும்புக் கம்பிகள் வீட்டிற்கு வரவில்லை.மொபைல் நம்பருக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என்று வந்தது. தான் ஏமாற்றப்பட்டதை ராஜண்ணா உணர்ந்தார். துமகூரு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை