உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புல்லட் மீது லாரி மோதி வாலிபர் உயிரிழப்பு

புல்லட் மீது லாரி மோதி வாலிபர் உயிரிழப்பு

புதுடில்லி:துவாரகாவில் அதிவேகமாக வந்த லாரி மோதி இளைஞர் உயிரிழந்தார்.துவாரகா 23வது செக்டாரில் வசிப்பவர் ஆகாஷ் தீப்,29. நேற்று காலை 8:00 மணிக்கு ராயல் என்பீல்டு புல்லட்டில் வேலைக்குச் சென்றார்.துவாரகா பிரதான சாலையில் செல்லும்போது, பின்னால் அதிவேகமாக வந்த லாரி, புல்லட் மீது பயங்கரமாக மோதியது. தூக்கி வீசப்பட்ட ஆகாஷ் தீப், பலத்த காயம் அடைந்த நிலையில், ஆம்புலன்ஸில் தீன் தயாள் உபாத்யாய் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.பரிசோதனை செய்த டாக்டர்கள் ஆகாஷ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதை உறுதி செய்தனர்.இதுகுறித்து, துவாராக 23வது செக்டார் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி