உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாறைகளில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவி

பாறைகளில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவி

கர்நாடகாவில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. மலைநாடு பகுதிகளான ஹாசன், சிக்கமகளூரு, ஷிவமொகாவில் பெய்யும் கனமழையால், அந்த மாவட்டங்களில் உள்ள சுற்றுலா தலங்களில், இயற்கை எழில் கொஞ்சுகிறது.சிக்கமகளூரில் இருந்து மூடிகெரே வழியாக மங்களூரு செல்லும் சார்மாடி வனப்பகுதி சாலை தற்போது ரம்மியமாக காட்சி அளிக்கிறது.சாலையோரம் உள்ள பாறைகளில் இருந்து ஊற்றுத் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் வாகனங்களை நிறுத்தி, பாறைகளில் இருந்து விழும் தண்ணீரை பார்த்து ரசிக்கின்றனர். மொபைல் போன்களில் 'செல்பி' புகைப்படம் எடுப்பதுடன், பாறையில் இருந்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ச்சி அடைகின்றனர்.இதுபோல ஹாசன் சக்லேஸ்பூரில் இருந்து தட்சிண கன்னடாவின் சுப்பிரமணிய ரோடு வரை சிராடி வனப்பகுதி சாலை செல்கிறது.இந்த பகுதியிலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், வனப்பகுதியில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இங்கும் சாலையோரம் வாகனங்களை நிறுத்திவிட்டு சுற்றுலா பயணியர், இயற்கையை உற்சாகமாக அனுபவிக்கின்றனர்.ஷிவமொகா ஆகும்பே வனப்பகுதி சாலையிலும் பாறையில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால், சுற்றுலா பயணியர் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். பெங்களூரில் உள்ள ஐ.டி., - பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்வோர் வார இறுதி நாட்களில், காரை எடுத்துக்கொண்டு நீண்ட துார பயணம் மேற்கொள்வர். தற்போது மேற்கண்ட பகுதிகளுக்கு சென்றால் இயற்கை எழில் நிறைந்த காட்சிகளை கண்கூடாக பார்த்துவிட்டு வரலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை