உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தண்ணீர் வீணாவதை தடுக்க ஆம் ஆத்மி அரசு தவறிவிட்டது

தண்ணீர் வீணாவதை தடுக்க ஆம் ஆத்மி அரசு தவறிவிட்டது

புதுடில்லி:தேசிய தலைநகரில் தண்ணீர் வீணாவதைத் தடுக்க ஆம் ஆத்மி அரசு தவறிவிட்டதாகவும், இந்த விவகாரத்தில் மக்களை தவறாக வழிநடத்துவதாகவும் பா.ஜ., குற்றஞ்சாட்டியுள்ளது.டில்லி பா.ஜ., செயலரும், புதுடில்லி எம்.பி.,யுமான பன்சூரி ஸ்வராஜ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் டேங்கர் மாபியாவால் அலைக்கழிக்கப்படுகிறார்கள். டேங்கர் மாபியா மீது நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்வதற்குப் பதிலாக, அமைச்சர் ஆதிஷி அவர்களுக்கு பாதுகாப்பை வழங்குகிறார்.டேங்கர் மாபியாவை கட்டுப்படுத்தினாலும், அதிக தண்ணீர் சேமிக்கப்படாது என அமைச்சர் கூறுவது, மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஏனெனில் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் மக்கள் டேங்கர் மாபியாவால் விரட்டப்படுகிறார்கள்.தண்ணீர் வீணாவதையும், கசிவதையும் தடுப்பதில் ஆம் ஆத்மி அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது. இந்த விவகாரத்தில் மக்களை தவறாக வழிநடத்துகிறது.ஆம் ஆத்மி அரசாங்கத்திடமும் ஆதிஷியிடமும், அவர்கள் இன்னும் எவ்வளவு காலம் சாக்குகளைக் கூறி மக்களைத் தவறாக வழிநடத்துவார்கள் என்பதை நான் கேட்க விரும்புகிறேன்.அவர்கள் குளிரூட்டப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பு அறையிலிருந்து வெளியே வந்து மக்களின் அவலத்தைப் பார்க்க வேண்டும். டேங்கர் மாபியா விவகாரத்தில் அதிகாரிகள் மீது பழிபோட அமைச்சர் முயற்சிக்கிறார்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை