உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உடல்நிலை மோசமடைந்ததால் உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார் டில்லி அமைச்சர்

உடல்நிலை மோசமடைந்ததால் உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார் டில்லி அமைச்சர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆம்ஆத்மி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து அவர், போராட்டத்தை கைவிட்டார். டில்லியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் அதை நீக்கும் பொருட்டு ஹரியானா அரசு தண்ணீர் திறக்க கோரி ஆத்ஆத்மி அமைச்சர் அதிஷி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.இன்று அதிகாலை அவருக்கு ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு குறைந்தது. இதையடுத்து அவரது ஆரோக்கியம் பாதிப்பு அடைந்தது. அதனால் அமைச்சர் அதிஷி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, அவர் உண்ணாவிரத போராட்டதை நிறைவு செய்தார். இதற்கு பதில் பார்லிமென்டில் டில்லியில் தண்ணீர் பிரச்னையை கிளப்ப முடிவு செய்துள்ளதாக ஆம் ஆத்மி தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

தத்வமசி
ஜூன் 25, 2024 15:12

ஆம் ஆத்மி கட்சியில் இருக்கும் நாடாளுமன்ற உருப்பினரக்கே பாதுகாப்பில்லை, அமைச்சருக்கு பக்கபலம் இல்லை. இதில் இவர்களை தேர்ந்தெடுத்த மக்களைச் சொல்ல வேண்டும் அவர்களுக்கு ஏதாவது இருக்கிறதா என்று ? படித்தவர்கள் ஓட்டு போடுவதில்லை. படிக்காதவனுக்கு காசு கொடுத்தால் யாருக்கும் ஓட்டு போடுவான். அவ்வளவு தான் ஜனநாயகம் இந்தியாவில். இது தான் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தல் முறை. இதில் பெருமை வேறு.


panneer selvam
ஜூன் 25, 2024 14:50

It is another publicity stunt .


M Ramachandran
ஜூன் 25, 2024 12:44

கட்சி தலைமைக்கு உங்கள் விஸ்வாசத்தை காட்டி விட்டீர்கள்.


Sridhar
ஜூன் 25, 2024 11:31

இது நல்ல டெக்னீக்கா இருக்குதுல்ல? கட்டுமரம் பாணியிலே பேருக்கு அப்பப்போ உணவு இடைவெளிகளுக்கு நடுவுல உண்ணாவிரதம் அப்புறம் ரெண்டு நாள் கழிச்சு சுவர் குறைஞ்சிடுச்சுன்னு ஆஸ்பத்திரி... அதோட போராட்டம் க்ளோஸ் முன்காலத்துல உண்மையாவே உண்ணாவிரதம் இருந்த போராளிகளுக்கெல்லாம் இந்த சுவர் விவகாரம் தெரியாம போச்சே


Ramanujadasan
ஜூன் 25, 2024 11:14

ஆட்ஷி சாகும்வரை உண்ணாவிரத முடிவில் உறுதியாக இருப்பார் என நம்பி நான் ஏமாறவில்லை .இ வரும் ச ரி, இவர் கட்சியும் சரி, இவர் தலைவரும் சரி கோமாளிகள் , பொய்யர்கள் , நம்ப வைத்து கழுத்தை அறுப்பவர்கள் என அனைவரும் அறிவர்


Ramanujadasan
ஜூன் 25, 2024 11:11

காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடைப்பட்ட வேளையில் ஒரு சாகும் வரை உண்ணா விரத நாடகத்தையே பார்த்து ரசித்தவர்கள் நாம் .அதற்க்கு முன் , ஆடிஷியின் சாகும் வரை உண்ணாவிரத நாடகம் ஒரு தூசு


Jysenn
ஜூன் 25, 2024 10:01

This app actor is giving a tough fight to diravida actors in reeling out fake narratives and shoddy performance in the public domain.


kantharvan
ஜூன் 25, 2024 09:43

ஒன்னும் முடியாது இந்த நோட்டா கட்சி .


sethu
ஜூன் 25, 2024 09:31

விடுங்க பாஸ் இதெல்லாம் நாட்டுக்கு பாரம் .


SVR
ஜூன் 25, 2024 07:54

கூறு கெட்ட கூத்தாடிகளின் கட்சி.


மேலும் செய்திகள்