ஆம் ஆத்மியின் போராட்டம் தொடரும்
விக்ரம்நகர்:'முதல்வர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர், பகத் சிங் உருவப்படங்களை அகற்றியதை தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவோம்' என, ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.நேற்று செய்தியாளர்களிடம் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் சஞ்சீவ் ஜா, குல்தீப் குமார் ஆகியோர் கூட்டாக கூறியதாவது:'ஜெய் பீம்' கோஷத்தை எழுப்பியதற்காக ஆம் ஆத்மியின் எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் 'மோடி-... மோடி...' என்று கோஷமிட்டனர்.முதல்வர் அலுவலகத்திலிருந்து அம்பேத்கர், பகத் சிங் உருவப்படங்களை அகற்றியதை பொறுத்துக் கொள்ள முடியாது. அதற்கு எதிராக ஆம் ஆத்மி தொடர்ந்து போராட்டம் நடத்தும்.ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்தபோது, அம்பேத்கர், பகத் சிங் படங்கள் இருந்த இடத்திலேயே மீண்டும் வைக்க வேண்டும்.பா.ஜ., தலைமையிலான அரசு, அம்பேத்கரை அவமதிக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.தேவையில்லாமல் ஆம் ஆத்மி இந்த விஷயத்தில் வதந்தியை பரப்புவதாக பா.ஜ., குற்றம் சாட்டியுள்ளது.