உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தலைமறைவாக இருந்த பலாத்கார குற்றவாளி கைது

தலைமறைவாக இருந்த பலாத்கார குற்றவாளி கைது

நங்லோய்: மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பலாத்கார குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.வடக்கு டில்லியின் பவானா பகுதியில் ஐந்து வயது சிறுமி கடத்திச் சென்று 2012ல் பலாத்காரம் செய்யப்பட்டாள். இந்த வழக்கில், ஒரு இளைஞரை போலீசார் கைது செய்தனர். குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளி, கொரோனா பரவல் காரணமாக 2020 ஏப்ரலில் பரோலில் விடுவிக்கப்பட்டார். 2021 பிப்ரவரியில் சிறையில் அவர் சரணடையவில்லை.தலைமறைவான அவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அவர், நங்லோய் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 11-ம் தேதி அங்கு சென்ற போலீசார், அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி