உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடிகர் தர்ஷனுக்கு காய்ச்சல்; சிறை மருத்துவமனையில் சிகிச்சை 

நடிகர் தர்ஷனுக்கு காய்ச்சல்; சிறை மருத்துவமனையில் சிகிச்சை 

பெங்களூரு : கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் தர்ஷனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.சித்ரதுர்காவைச் சேர்ந்த ரேணுகாசாமி, 33, என்பவரை கொலை செய்த வழக்கில், நடிகர் தர்ஷன் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.அதன் பின்னர் அவரது உடல் எடை குறைந்துள்ளது. சிறை உணவு சாப்பிடுவதால் ஒவ்வாமை ஏற்படுவதாகவும், வீட்டு உணவு சாப்பிட அனுமதிக்கும்படி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தர்ஷன் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனு மீது இரண்டு முறை விசாரணை நடந்தது. அடுத்த விசாரணை 29ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தர்ஷனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை