மேலும் செய்திகள்
முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீல் காலமானார்
4 hour(s) ago | 3
ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதிய கட்சி துவக்கம்
7 hour(s) ago
பெங்களூரு: 'பெங்களூரு விமான நிலையத்திற்கு கூடுதல் மெமு ரயில்களை இயக்க, தென்மேற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பெங்களூரு சென்ட்ரல் பா.ஜ., -- எம்.பி., மோகன் கோரிக்கை வைத்துள்ளார்.பெங்களூரு ரூரல் தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்திற்கு, பெங்களூரு நகரில் இருந்து பஸ்சில் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு மேலாகிறது. வாடகை கார்களில் சென்றாலும் கட்டணம் அதிகம்.இந்நிலையில் பெங்களூரு சிட்டி, கன்டோன்மென்ட், யஷ்வந்த்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து, சிக்கபல்லாபூர், தேவனஹள்ளிக்கு விமான நிலைய ஹால்ட் ரயில் நிலையம் வழியாக, மெமு ரயில்கள் இயக்கப்படுகின்றன.பெங்களூரில் இருந்து விமான நிலைய ஹால்ட் ரயில் நிலையம் செல்ல, டிக்கெட் கட்டணம் 10 ரூபாய் தான். ஆனால் இந்த ரயில்களை இயக்கும் நேரம் சரியில்லை என்று, விமான நிலையத்திற்கு செல்பவர்களிடமிருந்து குற்றச்சாட்டு உள்ளது.இந்நிலையில், பெங்களூரு சென்ட்ரல் பா.ஜ., -- எம்.பி., மோகன், தென்மேற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.'பையப்பனஹள்ளி ரயில் நிலையத்திலிருந்து விமான நிலைய ஹால்ட் ரயில் நிலையத்திற்கு, காலை 5:00 மணி முதல் காலை 8:00 மணி வரை, 30 நிமிடங்களுக்கு ஒரு முறை, மெமு ரயில்களை இயக்க வேண்டும். அங்கிருந்து ரயில் இயக்கப்படுவதன் மூலம், மெட்ரோ பயணியருக்கும் அனுகூலமாக இருக்கும்' என்றும் கூறியுள்ளார்.இது குறித்து, தென்மேற்கு ரயில்வே மூத்த அதிகாரிகள் கூறுகையில், 'விமான நிலையத்திற்கு மெமு ரயில் இயக்குவது குறித்து, ஹூப்பள்ளியில் உள்ள, தென்மேற்கு ரயில்வே தலைமையகம் முடிவு எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் எங்களால் முடிவெடுக்க முடியாது' என்று கூறினர்.
4 hour(s) ago | 3
7 hour(s) ago