உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குறைந்தபட்ச ஆதார விலை - விவசாயிகளின் உரிமை என்கிறார் ராகுல்

குறைந்தபட்ச ஆதார விலை - விவசாயிகளின் உரிமை என்கிறார் ராகுல்

புதுடில்லி: குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக லோக்சபாவில் தனி நபர் தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி, பார்லிமென்ட் வளாகத்தில், எதிர்க்கட்சி தலைவர் ராகுலை, விவசாய சங்க பிரதிநிதிகள் சந்தித்து பேசினர். பிறகு, ராகுல் வெளியிட்ட அறிக்கையில், குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைப்பது விவசாயிகளின் உரிமை எனக்கூறியுள்ளார்.குறைந்தபட்ச ஆதார விலை உத்தரவாதத்தை சட்டப்பூர்வமாக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி புதிய போராட்டங்கள் நடத்த போவதாக சம்யுக்த் கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா தலைவர்கள் அறிவித்து உள்ளனர். மேலும், லோக்சபாவில், தங்களது கோரிக்கைகள் தொடர்பாக தனிநபர் தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி பேரணி நடத்தப்படும் என அறிவித்த விவசாயிகள், ஆக.,15 அன்று டிராக்டர் பேரணி நடத்தப்படும் எனவும் கூறியுள்ளனர்.பார்லிமென்ட் வளாகத்தில், எதிர்க்கட்சி தலைவர் ராகுலை சந்தித்து பேச விவசாய சங்கத்தினர் திட்டமிட்டனர். இதற்காக அவர்கள் பார்லி., வளாகம் வந்தனர். ஆனால், மத்திய அரசு அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டதாக ராகுல் குற்றம்சாட்டினார். இதன் பிறகு தமிழகம், பஞ்சாப், ஹரியானா, உ.பி., தெலுங்கானா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட12 மாநிலங்களைச் சேர்ந்த விவசாய சங்கத்தினர், பார்லி வளாகத்தில் ராகுலை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, காங்., கட்சியின் கே.சி.வேணுகோபால், தீபெந்தர் சிங் ஹூடா, எம்.பி.,க்கள் அமரீந்தர் சிங் வாரிங் மற்றும் சுக்ஜிந்தர் சிங் ரன்தவா ஆகியோர் உடன் இருந்தனர்.இந்த சந்திப்பின் போது, குறைந்த பட்ச ஆதார விலை மற்றும் அதனை சட்டப்பூர்வ ரீதியில் உறுதி செய்வது உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி லோக்சபாவில் தனி நபர் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என விவசாய சங்கத்தினர் ராகுலிடம் வலியுறுத்தினர்.

உறுதி செய்வோம்

இது தொடர்பாக ராகுல் ‛எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவது விவசாயிகளின் உரிமை. அவர்கள் இதனை பெறுவதை இண்டியா கூட்டணி உறுதி செய்யும். இவ்வாறு அந்த பதிவில் ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

LakshmiNarasimhan KS
ஜூலை 24, 2024 19:15

இந்த வாய் தான் ஆதரவு விலை பற்றி அப்போ எதிர்த்தது. நாரவாயன் ராகுல்


lana
ஜூலை 24, 2024 16:29

அதென்ன மண்டை கசாயம் ஆகஸ்ட் 15 அன்று பேரணி. ஒரு நாள் கழித்து வைத்தால் என்ன. எத்தனை வேசம் போட்டாலும் கொண்ட காட்டி குடுக்குது


ram
ஜூலை 24, 2024 15:32

இவர்களை பார்த்தால் காலிஸ்தான் ஆட்கள் மாதிரி இருக்கிறார்கள். இவர்கள் பார்லிமென்டில் சந்திக்க எதற்கு அனுமதி கொடுத்தார்கள்.


கூமூட்டை
ஜூலை 24, 2024 14:34

கதை நல்லாயிருக்கு விவசாயம் பாபு செய்வாரா? வாழ்க வளமுடன் ஊழல்


Barakat Ali
ஜூலை 24, 2024 13:58

பாஜகவுக்கு எதிரா ஒவ்வொரு தரப்பையும் தூண்டி விட்டுக்கிட்டே இருப்பேன் ....


Sridhar
ஜூலை 24, 2024 13:32

மறைமுகமா வெளிநாட்டுல செய்யுற வேலைகளை தவிர இது நேரிடையா வெளிப்படையா உள்நாட்டிலேயே செய்யுற வேலை. இதை எதிர்கொள்ள ஆளும் ஆட்சி எந்த அளவுக்கு தயார் நிலையில் இருக்குது? எதிர்கட்சிணா எந்த எல்லைக்கும் போயி அரசியல் செய்யத்தான் செய்வாங்க. அதை இந்த ஆளு தனக்காக தெரியாவிட்டாலும், வெளிநாட்டுக்கறாங்க கிட்ட ஆலோசனை பெற்று செய்கிறான். இதுல என்ன தப்பு இருக்கு? இவிங்க செஞ்ச இமாலய ஊழல்களில் ஒன்றைக்கூட கோர்ட்டுக்கு கொண்டுவந்து நிரூபிக்கமுடியாத நிலையில் இருக்கும் ஆளும் ஆட்சி எப்படி ஒரு திறமையான நிர்வாகத்தை கொடுக்கும் என்று நம்பமுடியும்?


GMM
ஜூலை 24, 2024 13:28

விவசாய நிலங்கள் மாநில நிர்வாகம் கீழ். விவசாயிகள் மத்திய அரசினை கொள்முதல் செய்ய கூறி, குறைந்த பட்சம் ஆதரவு விலை கோருகிறார்கள். MSP நிர்ணயித்து மாநிலம் சட்டம் இயற்ற முடியும். கொள்முதல் செய்ய முடியும். அப்போது மானியம், இலவச மின்சாரம், விவசாய கடன் தள்ளுபடி இருக்காது. ராகுலை சந்திப்பதை விட காங்கிரஸ் கூட்டணி ஆளும் மாநில முதல்வர்களை முதலில் சந்திக்க வேண்டும்.


nagendhiran
ஜூலை 24, 2024 13:00

கர்நாடகம் காவேரி தண்ணீர் தரமறுக்குது அதை பப்பு தட்டி கேட்பாரா? நடிப்பு?


ram
ஜூலை 24, 2024 12:53

அடுத்த டூல் கிட் போல. இந்த ஆளு மேல் இருக்கும் வழக்குகளை துரிதப்படுத்தினால் அடங்கி விடுவார்.


ganapathy
ஜூலை 24, 2024 12:47

இவனால் முன்னாடி தூண்டபட்ட விவசாய போராட்டத்தால் நாள் ஒன்றுக்கு 350 கோடி நஷ்டம் நமக்கு கிட்டதட்ட2 வருசத்துல. இவங்கப்பா காசுல அத திரும்ப கொடுப்பானா?


மேலும் செய்திகள்









புதிய வீடியோ